அரசியல்

யுஜிசி திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் - ஒன்றிய அரசின் செயலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் !

UGC விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

யுஜிசி திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் - ஒன்றிய அரசின் செயலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள UGC வரைவு நெறிமுறைகளின் படி, கல்வித்துறை சாராத தொழில் துறை நிபுணர்கள், பொதுத்துறை சார்ந்தவர்கள் போன்றவர்களை பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரத்தை மாநில ஆளுநர்களுக்கு வழங்கும் வகையில் UGC விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதே போல துணை வேந்தரை தேடும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியை நீக்கிவிட்டு, அதற்கு பதில் ஆளுநரால் நியமிக்கப்படும் பல்கலைக்கழக உறுப்பினரே இடம்பெறுவார் என்றும் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதே போல UGC விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில், "யுஜிசி விதிகளை திருத்தியது மாநில கல்விக் கொள்கையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல். யுஜிசி விதிகளை தன்னிச்சையாக திருத்தியதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களில் யுஜிசி விதிகளை திருத்துவதன் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டங்கள் என்பது செல்லாததாகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை இந்த திருத்தத்தின் மூலம் ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது. மேலும், கல்வி சாராத நபர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் அபாயம் இந்த திருத்தத்தில் உள்ளது. யுஜிசி திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மேலும், கல்வியை மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்திகிறேன்."என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories