அரசியல்

”மோடி அரசு அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம்” : சஞ்சய் ராவத் திட்டவட்டம்!

ஒன்றிய பா.ஜ,க அரசு, அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

”மோடி அரசு அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம்” : சஞ்சய் ராவத் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சியினரின் தயவில் பா.ஜ.க ஆட்சியை நகர்த்தி வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு, அடுத்தாண்டு வரை ஆட்சியில் நீடிப்பது சந்தேகம் என சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத்,ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு அடுத்த ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்குமா என்பது சந்தேகம்.

இந்தமுறை மோடி தனது பதவிக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யமாட்டார்.ஒன்றியத்தில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் மகாராஷ்டிரா உட்பட பிற மாநிலங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories