அரசியல்

கட்ரா மக்களின் போராட்டத்தில் இணைந்த ஜம்மு - காஷ்மீர் அரசு! : ஒன்றிய பா.ஜ.க.விற்கு நெருக்கடி!

ஜம்மு - காஷ்மீரின் கட்ரா பகுதியில் ரூ. 250 கோடியில் Ropeway திட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கட்ரா பகுதி மக்கள் 5ஆவது நாளாக முழு அடைப்பு போராட்டம்.

கட்ரா மக்களின் போராட்டத்தில் இணைந்த ஜம்மு - காஷ்மீர் அரசு! : ஒன்றிய பா.ஜ.க.விற்கு நெருக்கடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கட்ரா பகுதியில் ஒன்றிய அரசு ரூ.250 கோடியில் Ropeway திட்டம் தொடங்கப்படும் என கடந்த மாதம் அறிவித்தது. இத்திட்டத்தால், கயிறு வழி பயணம் அதிகரிக்கும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டம் ஒன்றிய அரசின் வியாபாரத்திற்கு துணை புரிந்ததே தவிர, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்வதற்கு துணை புரியவில்லை. கட்ரா பகுதியை சேர்ந்த 40,000 மக்களும் போக்குவரத்து வாகனங்களை வைத்தே தொழில் நடத்தி வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் திட்டமாக தான் Ropeway திட்டம் அமைந்துள்ளது.

கட்ரா மக்களின் போராட்டத்தில் இணைந்த ஜம்மு - காஷ்மீர் அரசு! : ஒன்றிய பா.ஜ.க.விற்கு நெருக்கடி!

இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் 5ஆவது நாளாக கட்ரா பகுதியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை காண வந்த ஜம்மு - காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் குமார், “மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்” என ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிற்கு வலியுறுத்தினார்.

இதன் வழி, மக்களின் போராட்டத்திற்கு பக்கபலமாக ஜம்மு - காஷ்மீர் அரசே குரல் எழுப்பி, ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான முழக்கம் வலுப்பெற்றுள்ளது. மேலும், போராட்டக் களத்தில் பேசிய துணை முதல்வர் சுரீந்தர் குமார், “ஏழைகளை வஞ்சிக்காதீர்கள். அவர்களின் கண்ணீரை கடவுள் கண்டால், உங்களை எப்போதும் விடமாட்டார்” என்றார்.

“மக்களின் இடர்களில் பங்கேற்று, உரிமையை மீட்டுத்தருவோம். இதற்கு முதல்வரும், ஆளும் கட்சி தலைவர்களும் தங்களது பங்களிப்பை அளிப்பர்” என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories