அரசியல்

அம்பேத்கர் அவமதிப்பு : ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் அவமதிப்பு :  ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பிக்களும் அந்த அம்பேத்கர் பெயரை குறிப்பிட்டு மசோதாவை எதிர்த்து பேசினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, "அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும்" என்று கூறினார். அம்பேத்கரை அவமரியாதையாக பேசிய அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக,விசிக ,காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கல்லூரி மாணவர்களும் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் அவமதிப்பு :  ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

கல்லூரி வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அமித்ஷாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதே போல அமித்ஷாவை கண்டித்து கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலை கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுஅமித்ஷாவின் உருவப் படத்தை எரித்து, அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

banner

Related Stories

Related Stories