அரசியல்

“ஒரு அவைக்குள்ளே ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு...” - சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது என்று CPIM எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஒரு அவைக்குள்ளே ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு...” - சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டு வருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

“ஒரு அவைக்குள்ளே ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு...” - சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

இதன் காரணமாக இதற்கு எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஒரே நாடு - ஒரே தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (டிச.17) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு ’ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்தது. ஏற்கனவே இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு மேலும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

“ஒரு அவைக்குள்ளே ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு...” - சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

அந்த வகையில் இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில்,

=> “’ஒரே தேசம் ஒரே தேர்தல்’ ஜனநாயகம் - கூட்டாட்சி - மக்கள் கருத்து... மூன்றின் அடிப்படையையும் அறுத்தெரியும் சட்ட வரைவு. “ஒரே தேர்தல்" என்பது தேர்தலையே ஒழிக்கும் பாசிச மனோபாவம் என்பதை அம்பலப்படுத்துவோம். ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்போம்.

=> “ஒரே தேர்தல்… மக்களவையே முன்மாதிரி ! மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர். ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது.” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது திமுக எம்.பி டி.ஆர்.பாலு ”இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பத் தயார் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 220 வாக்குகளும், எதிராக 149 வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories