அரசியல்

மீண்டும் விவசாயிகள் போராட்டம் : டெல்லியை நோக்கி முன்னேறும் உ.பி. விவசாயிகள் !

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 20 மாவட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட பல இடங்களில் தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேறி வருகிறார்கள்.

மீண்டும் விவசாயிகள் போராட்டம் : டெல்லியை நோக்கி முன்னேறும் உ.பி. விவசாயிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு.இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் போராட்டத்தை விடாத விவசாயிகள் ஹரியானா எல்லையான ஷம்பு,கிநோரி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தங்கி கடந்த 10 மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

jagjit singh
jagjit singh

இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தாலேவால் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவரின் போராட்டத்துக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டம் நடத்துவது அனைவரின் ஜனநாயக உரிமை. ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கநூறி எல்லையில் சாலையை முடக்காமல் உண்ணாவிரதம் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 20 மாவட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட பல இடங்களில் தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேறி வருகிரார்கள். இதனால் உத்தர பிரதேசம் - டெல்லி எல்லையான நொய்டா, கௌதம் புத்தர் நகர் போன்ற பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் தடுக்க சில்லா எல்லையில் போலீசார் கூடுதல் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories