அரசியல்

🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !

🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !

ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களை தாண்டி 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது இந்தியா கூட்டணி !

இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 8 இடங்களிலும், CPI(ML)(L) கட்சி 1 இடத்திலும் வெற்றி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி அமோக வெற்றி!

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி, 6,22,338 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்க இடைத்தேர்தல் : திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி !

மேற்கு வங்கத்தின் சிதாய், நைஹாதி, மதரிஹாத் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி !

கர்நாடகா இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி !

கர்நாடகாவின் சென்னபட்டணம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.யோகீஸ்வரா வெற்றி !

கர்நாடகாவில் பலம் காட்டிய காங்கிரஸ்!

கர்நாடகாவின் சென்னபட்டணம், சந்தூர், ஷிகாவோன் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட, அம்மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி !

மஜத சார்பில் குமாரசாமி மகன் நிகில் கௌடா சென்னபட்டணத்திலும், பாஜக சார்பில் பசவராஜ் பொம்மை பாரத் ஷிகாவோனிலும் போட்டியிட்டு தோல்வியைடைந்துள்ளனர்.

ஜார்க்கண்டில் CPI(ML)(L) வேட்பாளர் வெற்றி !

ஜார்க்கண்டின் சிந்திரி தொகுதியில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியில் உள்ல CPI(ML)(L) கட்சி வேட்பாளர் சந்திரடியோ மகதோ 1,05,136 வாக்குகள் பெற்று வெற்றி !

பாலக்காடு இடைத்தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை !

கேரளாவின் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாலக்காடு இடைத்தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை !

கர்நாடகா இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி !

கர்நாடகாவின் சாந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அன்னப்பூர்ணா வெற்றி !

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு பின்னடைவு !

பீகாரின் ராம்கர் தொகுதியில் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர் சுசில்குமார் சிங், இதுவரை வெறும் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி!

ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களை தாண்டி 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது இந்தியா கூட்டணி !

81 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்டில் பாஜக தொடர் பின்னடைவு !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 50 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக 29 இடங்களை பெற்று பின்னடைவு !

பிரியங்கா காந்தி 2.27 லட்சம் வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2.27 லட்சம் வாக்குகளில் முன்னிலை !

நாந்தேட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !

மகாராஷ்டிராவின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவான் ரவிந்திர வசந்த்ராவ் முன்னிலை !

சவான் ரவிந்திர வசந்த்ராவ், நாந்தேட் தொகுதியின் மறைந்த எம்.பி. வசந்த்ராவ் பல்வாந்த்ராவ் சவானின் மகன் ஆவார்.

பாஜக வேட்பாளர் சம்பாய் சோரன் பின்னடைவு !

ஜார்க்கண்டின் சராய்கேலா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சம்பாய் சோரன் பின்னடைவு !

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகிய சம்பாய் சோரன், கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 56 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக 24 இடங்களை பெற்று பின்னடைவு !

நாந்தேட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !

மகாராஷ்டிராவின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவான் ரவிந்திர வசந்த்ராவ் முன்னிலை !

சவான் ரவிந்திர வசந்த்ராவ், நாந்தேட் தொகுதியின் மறைந்த எம்.பி. வசந்த்ராவ் பல்வாந்த்ராவ் சவானின் மகன் ஆவார்.

நானா படோல் முன்னிலை !

மகராஷ்டிராவின் சகோலி தொகுதி போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் முன்னிலை !

இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி !

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 1,65,487 வாக்குகளில் முன்னிலை !

ஆதித்யா தாக்கரே முன்னிலை !

மகாராஷ்டிராவின் வொர்லி தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா கட்சி (உத்தவ் பிரிவு) பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரே முன்னிலை !

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 43 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக 36 இடங்களை பெற்று பின்னடைவு !

பிரியங்கா காந்தி 46,000 வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 46,018 வாக்குகளில் முன்னிலை!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் முன்னிலை !

ஜார்க்கண்டின் பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முன்னிலை !

பிரியங்கா காந்தி 29,000 வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 29,802 வாக்குகளில் முன்னிலை!

பிரியங்கா காந்தி 27,000 வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 27,603 வாக்குகளில் முன்னிலை!

வயநாட்டில் பிரியங்கா காந்தி முன்னிலை !

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2,300 வாக்குகளில் முன்னிலை !

கடந்த நவ.13-ம் தேதி வயநாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், இந்த தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அதாவது மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த நவ.20-ம் தேதி ஒரே கட்டமாகவும், 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் கடந்த நவ. 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

மேலும் இவையுடன் சேர்ந்து கேரளாவின் வயநாடுக்கும், மகாராஷ்டிராவின் நான்தேட் மக்களவைத் தொகுதிகளுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள இதர 46 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த சூழலில் நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories