அரசியல்

“மணிப்பூர் முதல்வர் எங்களை சந்திக்கவில்லை!” : ஒன்றிய பா.ஜ.க.வின் பொய்யை வெளிக்காட்டிய எம்.எல்.ஏ.க்கள்!

“மணிப்பூர் முதல்வர் எங்களை சந்திக்கவில்லை!” : ஒன்றிய பா.ஜ.க.வின் பொய்யை வெளிக்காட்டிய எம்.எல்.ஏ.க்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மணிப்பூரில் கலவரம் தொடங்கி ஒன்றரை ஆண்டைக் கடந்தும், கலவரத்தின் பதற்றமோ அல்லது மணிப்பூர் மக்கள் ஆட்கொண்டிருக்கும் வஞ்சிப்போ நீங்கப்படவில்லை.

இஸ்ரேல் - காஸா, ரசியா - உக்ரைன் என மற்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் போருக்கு கருத்து தெரிவிக்கவும், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் நேரம் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோடி, அமித்ஷா போன்ற முன்னிலை நிகராளிகளுக்கு, மணிப்பூர் கலவரத்தை போக்கவும், மணிப்பூர் சென்று பார்வையிடவும் நேரமில்லாத சூழலே நிலவுகிறது.

இதனால், பா.ஜ.க.வில் இருக்கிற குகி - சூமி இனத்தை சேர்ந்த மக்கள் நிகராளிகளான, மணிப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் சினத்திற்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என பிரச்சாரம் செய்பவர்களில், பா.ஜ.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அடக்கம்.

“மணிப்பூர் முதல்வர் எங்களை சந்திக்கவில்லை!” : ஒன்றிய பா.ஜ.க.வின் பொய்யை வெளிக்காட்டிய எம்.எல்.ஏ.க்கள்!

குறிப்பாக, பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மணிப்பூரின் இரு மக்களவை தொகுதிகளிலும் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.விற்கு படுதோல்வியை பரிசாக அளித்தனர் மணிப்பூர் மக்கள். இந்நிகழ்வுகளே, மணிப்பூர் மக்கள், பா.ஜ.க.வின் மீது கொண்டிருக்கும் அளவிட இயலாத அதிருப்தியை வெளிக்காட்டி வருகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் இருக்கும் சிறுபான்மையின சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில், “மணிப்பூர் கலவரம் தொடர்பாக முதல்வர் பைரன் சிங், குகி - சூமி இன சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேசினார் என ஒன்றிய பா.ஜ.க அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது பொய்.

அப்பாவி பெண்களை படுகொலை செய்யும் மெய்தி இனத்தின் வன்முறையாளர்களை கடுமையாக கண்டிக்கிறோம். அதனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளையும் கண்டிக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories