அரசியல்

“அமைச்சரவையில் உயர் சமூக உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது பாஜக” - பாஜக MP வேதனை!

“அமைச்சரவையில் உயர் சமூக உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது பாஜக” - பாஜக MP வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடகாவின் பாஜகவின் முக்கியத் தலைவராக இருந்து வருபவர் ரமேஷ் ஜிகஜினகி (Ramesh Jigajinagi). தொடர்ந்து 7 முறை எம்.பியாக இருந்து வரும் இவர் ஆரம்பத்தில் ஜனதா கட்சியில் இருந்தார். பின்னர் லோக் தளம், லோக் சக்தி, ஐக்கிய ஜனதா தளத்தில் ஆகிய கட்சியில் இருந்த இவர், 2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

தலித் சமூகத்தை சேர்ந்த இவர், கர்நாடகாவின் சிக்கொடி (Chikkodi) மக்களவைத் தொகுதியில் 1998-ம் ஆண்டு லோக் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ஜனதா தளம் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2004-ம் ஆண்டு பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரமேஷ் ஜிகஜினகி
ரமேஷ் ஜிகஜினகி

பின்னர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிஜப்பூர் (Bijapur) தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தொடர்ந்து 4 முறை (2024 தேர்தல் உட்பட) வெற்றி பெற்று எம்.பியாக இருந்து வருகிறார். கர்நாடகாவில் பாஜகவுக்கு தலித்துகளின் ஆதரவு இல்லையென்றாலும், ரமேஷ் ஜிகஜினகிக்கு ஆதரவு இருக்கிறது. அதனாலே அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

எனினும் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் இவருக்கு இடமில்லை. இதனால் கர்நாடக தலித் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் தொடர்ந்து 7 முறை எம்.பியாக இருந்து வருகிறார். அதனடிப்படையில் கூட இவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் ஜிகஜினகி
ரமேஷ் ஜிகஜினகி

இதனை ரமேஷே கேள்வியாக எழுப்பி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை அவர் பேசியதாவது, "தென்னிந்தியாவிலிருந்து 7 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் எம்.பி நான்தான். ஆனால், நான் பாஜக அமைச்சரவையில் இல்லை. மோடி தலைமையிலான பாஜக, அமைச்சரவை நியமனங்களில் தலித்துகளை விட உயர் சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

எனக்கு அமைச்சரவை பதவி தேவையில்லை. நான் எனது தொகுதிக்கு திரும்பியதும், பலர் என்னை திட்டினார்கள். பாஜக தலித்களுக்கு எதிரானது என்று என்னை எச்சரித்தனர். தலித்துகள் பா.ஜ.க-வை ஆதரிக்கவில்லையா? நான் மிகவும் வேதனையடைந்திருக்கிறேன். ஒன்றிய அரசில் நான் அமைச்சராக வேண்டும் என்று மக்களிடமிருந்து அழுத்தம் வருகிறது" என்று பேட்டியளித்துள்ளார். இவரது பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் ஜிகஜினகி, ஜெய்ராம் ரமேஷ், பர்த்ருஹரி மஹ்தாப்
ரமேஷ் ஜிகஜினகி, ஜெய்ராம் ரமேஷ், பர்த்ருஹரி மஹ்தாப்

ஏற்கனவே அண்மையில் நடைபெற்ற தற்காலிக சபாநாயகர் பதவியை சீனியர் எம்.பி-க்கு அளிக்கும் நியதி இருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி கொடிக்குன்னில் சுரேஷுக்கு அளிக்காதது பெரும் சர்ச்சையானது. தலித் என்பதால் சுரேஷ் நிராகரிக்கப்பட்ட விவாகரத்துக்கு பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி-க்களான டி.ஆர்.பாலு உள்பட 2 பேர் தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக துணை சபாநாயகர் பதவியை நிராகரித்தனர்.

இதையடுத்து 7 முறை எம்.பியாக இருந்ததால் பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதாக பாஜக விளக்கம் கொடுத்த நிலையில், அதே போல் 7 முறை எம்.பி-யாக இருந்த ரமேஷ் ஜிகஜினகிக்கு ஏன் கொடுக்கவில்லை ? அவரும் தலித் என்பதால் நிராகரிக்கப்பட்டாரா? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதற்கு பாஜக எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில், தற்போது ரமேஷ் ஜிகஜினகியே, தனக்கு ஏன் அமைச்சரவையில் இடமில்லை ? என்று கேள்வியெழுப்பும் கோணத்தில் பேசியுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories