அரசியல்

நீட் முறைகேடு: “குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?” -ஒன்றிய அமைச்சருக்கு வில்சன் MP கேள்வி

நீட் முறைகேடு விவகாரத்தில் குற்றம் செய்த அதிகாரிகளை ஏன் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் முறைகேடு: “குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?” -ஒன்றிய அமைச்சருக்கு வில்சன் MP கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது.

நீட் முறைகேடு: “குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?” -ஒன்றிய அமைச்சருக்கு வில்சன் MP கேள்வி

இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் ரூ.32 லட்சம் லஞ்சம் பெற்று வினாத்தாளை கசியவிட்டதாக இடைத்தரகர் ஒருவர் வாக்குமூலம் அளித்ததோடு, ரூ.1.8 கோடிக்கான காசோலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இப்படி தொடர் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வழக்கு இன்னும் CBI க்கு மாற்றாமல் ஒன்றிய அரசு தாமதப்படுத்தி வருவதாக திமுக மூத்த வழக்கறிஞரும் எம்.பி-யுமான வில்சன், தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் முறைகேடு: “குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?” -ஒன்றிய அமைச்சருக்கு வில்சன் MP கேள்வி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் கூட, இன்னும் CBI விசாரணைக்கு உத்தரவிடவில்லை ஒன்றிய அரசு.

பீகார், குஜராத் மாநிலங்களில் இந்த முறைகேடு தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் CBI விசாரணைக்கு உத்தரவிடுவதில் தாமதம் ஏற்படுவதால், விசாரணை தொடரப்படாத மேலும் சில மாநிலங்களில் குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்க நேரிடும்.

இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலை அளிக்கிறது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை ஜெ.பி. நட்டா, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்?

நீட் முறைகேடு: “குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?” -ஒன்றிய அமைச்சருக்கு வில்சன் MP கேள்வி

பிரதமர் மோடி அவர்களே, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் "தேசிய ஆணையச் சட்டம் 2019"-ஐ திருத்துவதன் மூலம், NEET & EXIT தேர்வுகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்த மாற்றம் தனிப்பட்ட மாநிலங்கள் தங்கள் சொந்த மருத்துவ சேர்க்கை நடைமுறைகளை நிர்வகிக்க அனுமதிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2021-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதை குடியரசுத் தலைவர் தயவுசெய்து பரிசீலினை செய்ய வேண்டும்."

நீட் முறைகேடு தொடர்பாக நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணையின்போது, ஒன்றிய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததோடு, 2 வாரங்களில் முறையான விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கு ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories