அரசியல்

MPக்களை திட்டமிட்டு தடுக்கும் BJP அரசு : எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு திரிணாமுல் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

MPக்களை திட்டமிட்டு தடுக்கும் BJP அரசு : எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு திரிணாமுல் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் சென்றார். அப்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (CISF) அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து எம்.எம். அப்துல்லா, மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”நான் நாடாளுமன்றத்திற்குள் சென்றபோது CISF படையினர் என்னை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர்கள், ’எங்கு செல்கிறீர்கள்?, இங்கு வந்ததற்கான நோக்கம் என்ன?’ போன்ற கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களின் இந்த நடத்தையால் நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறித்து கேள்வி எழுப்ப சபாநாயகருக்கு மட்டுமே உரிமை உண்டு. CISF படையினர் இப்படி நடந்து கொண்டது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.எம். அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்.பி சாகேத் கோகலே, வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றம் செல்வதற்கு அனைத்து உரிமைகளும் உறுப்பினருக்கு உள்ளது. இந்தியா கூட்டணி எம்.பி.க்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்ற பாதுகாப்பு சிஐஎஸ்எஃப்-க்கு மாற்றப்பட்டதா?” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories