அரசியல்

NDA கூட்டணி ஆட்சி எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது ஒரு கேள்வி குறிதான் - கே.பாலகிருஷ்ணன் !

NDA கூட்டணி ஆட்சி எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது ஒரு கேள்வி குறிதான் -  கே.பாலகிருஷ்ணன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மோடி அரசாங்கம் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது ஒரு கேள்வி குறிதான்?மோடிக்கு கூட்டணி ஆட்சி நடத்தும் பக்குவம் இருக்குமா என்பது தெரியாது

குஜராத்திலும் சரி டெல்லியிலும் சரி கூட்டணியை அனுசரித்து ஆட்சி நடத்திய அனுபவம் இல்லாதவர் மோடி. எதேச்சிய அதிகாரம் ஆட்சி நடத்தி பழக்கப்பட்டவர். இதனால் கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு நடத்த போகிறார் என்பது தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் புறக்கணிக்கிறோம் என சொல்வது மோசடியானது. இடைத்தேர்தலில் சந்திக்கின்ற திராணியோ தைரியமோ அதிமுகவிற்கு இல்லை. கோயமுத்தூரில் இரண்டு நாட்களில் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என கூறிய எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது மறுப்பதற்கு காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான்.

NDA கூட்டணி ஆட்சி எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது ஒரு கேள்வி குறிதான் -  கே.பாலகிருஷ்ணன் !

விக்கரவாண்டி தேர்தலை அதிமுகவினர் புறக்கணித்து, வாக்களிக்க மறுத்தால் கட்சி அவர் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம். அதே நேரம் அதிமுகவினர் வேறு கட்சிக்கு வாக்களித்தால் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என அர்த்தம்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளது தற்பொழுது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories