அரசியல்

"எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது " - பாஜகவை நேரிடையாக விமர்சித்த ஷிண்டே பிரிவு சிவசேனா !

சிவசேனா எம்.பி ஶ்ரீரங்க் பர்னே பாஜக தனது பழைய நண்பர்களை மிகவும் சாதாரணமாக நடத்துகிறது என்று விமர்சித்துள்ளார்.

"எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது " - பாஜகவை நேரிடையாக விமர்சித்த ஷிண்டே பிரிவு சிவசேனா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

இதனிடையே தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 தொகுதிகளிளும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

shrirang barne
shrirang barne

அதே நேரம் பாஜக 9 தொகுதிகளிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தமாக இந்தியா கூட்டணி 30 தொகுதியிலும், பாஜக கூட்டணி 17 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பில் சிவசேனாவுக்கு ஒரு இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசியுள்ள சிவசேனா எம்.பி ஶ்ரீரங்க் பர்னே பாஜக தனது பழைய நண்பர்களை மிகவும் சாதாரணமாக நடத்துகிறது என்று விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "எங்களது கட்சியை விட குறைவான எம்.பி.க்களை கொண்ட கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துள்ள இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.

வெறும் 2 உறுப்பினர்களை கொண்ட குமாரசாமி, ஐந்து எம்.பி.க்களை கொண்ட சிராக் பஸ்வானுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ள எங்களுக்கு இணையமைச்சர் பதவி மட்டும் கொடுத்து அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பாஜக தனது பழைய நண்பர்களை மிகவும் சாதாரணமாக நடத்துகிறது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories