அரசியல்

நீட் முறைகேடு : "முழு பூசணிக்காய் சொற்றில் மறைப்பது போன்ற செயல்தான் இது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

நீட் முறைகேடு : "முழு பூசணிக்காய் சொற்றில் மறைப்பது போன்ற செயல்தான் இது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வு வினாத்தாள்களில் 180 கேள்விகள் இருக்கும். அதில் சரியான பதில் அளித்தால் நான்கு மதிப்பெண் வழங்கப்படும். அது போல் ஒரு பதில் தவறாக இருந்தால் ஐந்து மதிப்பெண் குறைக்கப்படும். இதுதான் நீட் தேர்வின் வினாத்தாள் மதிப்பெண் வழங்கும் முறைகள்.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு மொத்தம் உள்ள 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் பெற்றவர் ஒரு நபர். 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வில் இரண்டு நபர் 720 மதிப்பெண் பெற்றார். 2022 ஆம் ஆண்டு நீட் தேர்வில் மூன்று பேர் 720 மதிப்பெண் பெற்றனர். ஆனால் 2024 ஆம் ஆண்டு 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றறுள்ளது‌ எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவிக்கிறது. ஆனால் இந்திய அளவில் உள்ள கல்வியாளர்கள் கூறுவது என்னவென்றால் உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளும் கருணை மதிப்பெண் குறித்து வெளியிடப்படவில்லை என்கிறார்கள்.அவ்வாறு உச்ச நீதிமன்றம் கருணை மதிப்பெண் போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தால் அந்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அனைவருக்கும் அதைப்பற்றி தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

நீட் முறைகேடு : "முழு பூசணிக்காய் சொற்றில் மறைப்பது போன்ற செயல்தான் இது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இருந்து மட்டும் ஏழு பேர் 720 என்ற முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதுவே நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற சந்தேகம் எழும்புகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாக்கள் தமிழக அரசிடமிருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்து ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து குடியரசு தலைவர் உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து பின்னர் உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறையிடம் விளக்கம் கேட்டு அந்த விளக்கமும் உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 5 முதல் 6 முறை நடைபெற்றுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் தமிழ்நாட்டில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது...தேசிய தேர்வு முகமை தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள். 23 லட்சம் பேர் இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இதில் எந்த தவறும் நடக்கவில்லை என்று சொல்வது முழு பூசணிக்காய் சொற்றில் மறைப்பது போன்றதாகும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories