அரசியல்

28 நொடி வீடியோ... 9 ஆங்கிளில் டிசைன் டிசைனா போஸ்.. மோடியின் தியான Photoshoot வீடியோ வைரல்!

கன்னியாகுமரியில் மோடியின் தியான Photoshoot தொடர்பான 28 நொடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

28 நொடி வீடியோ... 9 ஆங்கிளில் டிசைன் டிசைனா போஸ்.. மோடியின் தியான Photoshoot வீடியோ வைரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் நடைபெற்று வந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாளையோடு (ஜூன் 1) நிறைவடைகிறது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறி, மோடி கன்னியகுமரியில் தியானத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

அதன்படி நேற்று கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, அங்கிருந்த விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கினர். 45 மணி நேரம் (ஜூன் 1) வரை தொடர்ந்து தியானத்தில் மோடி ஈடுபடவுள்ளார். குளிப்பதற்கும், தூங்குவதற்கு மட்டுமே சிறிது நேரம் ஒதுக்குவார். தொடர்ந்து ஏசி அறையில் அவர் விடாமல் தியானத்தில் ஈடுபடுகிறார்.

28 நொடி வீடியோ... 9 ஆங்கிளில் டிசைன் டிசைனா போஸ்.. மோடியின் தியான Photoshoot வீடியோ வைரல்!

மேலும் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு பதிலாக பழச்சாறுகள், பழவகைகள் உள்ளிட்டவையை எடுத்துக்கொள்கிறார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் தியானம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 28 நொடி உள்ள அந்த வீடியோவில் 9 ஆங்கிளில், கேமராக்கள் அவரை விதவிதமாகி போட்டோஷூட் எடுத்துள்ளது.

விவேகானந்தர் மண்டபத்தில், விவேகானந்தர் சிலை முன்பு அமர்ந்து மோடி தியானம் செய்து வருகிறார். பொதுவாக தியானத்தில் இருப்பவர்கள் அமைதியான சூழலில் இருப்பார்கள். மேலும் சாதாரண இயற்கை காற்றையே சுவாசிப்பார்கள். ஆனால் மோடியின் தியான இடத்தில் முழுவதுமாக AC அமைக்கப்பட்டு அதில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

28 நொடி வீடியோ... 9 ஆங்கிளில் டிசைன் டிசைனா போஸ்.. மோடியின் தியான Photoshoot வீடியோ வைரல்!

ஏற்கனவே தேர்தல் விதிகளை தொடர்ந்து மீறி வரும் மோடி, தற்போது பிரசாரம் ஓய்ந்த பிறகும், அனைவர் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்று தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது தியானம் தொடர்பாக புகைப்படம் வீடியோ என பலவை வைரலாகி வருகிறது. மோடியின் இந்த செயலுக்கு கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

எனினும் இதுவே மோடி, பிரதமாராக மேற்கொள்ளும் கடைசி தியானம் என்றும், போட்டோஷூட் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories