அரசியல்

13 நாட்கள் கடந்துவிட்டன : மெளனம் கலைப்பாரா மோடி?

முன்னாள் நீதிபதிகள் இருவரும், மூத்த ஊடகவியலாளர் என். ராம் அவர்களும், ராகுல் காந்தி - மோடி இடையே நேரடி வாதம் என வலியுறுத்தியதற்கு, இன்று வரை வாய் திறக்காத மோடி.

13 நாட்கள் கடந்துவிட்டன : மெளனம் கலைப்பாரா மோடி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

‘நான் கடவுளின் நேரடி படைப்பு, அவ்வப்போது கடவுளும் நானே’ என்ற எண்ணத்தில், நாட்டின் பிரதமராக ஆட்சி செய்து வரும் மோடி,

எதிர்க்கட்சியான காங்கிரஸின் குறிப்பிடத்தக்க தலைவர் ராகுல் காந்தியுடன் நேரடி வாதம் மேற்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம் என்ற கேள்வியும்,

“நான் செய்த செயல்கள் எல்லாம் கடவுளின் உந்துதலால் செய்தது, நான் செய்யும் செயல்களும் கடவுளின் உந்துதலால் செய்யப்படுகின்றனவே.

பா.ஜ.க.விற்கு வாக்களிப்பவர்கள், எனது சிறப்பிற்குரிய செயல்களால் புன்னியம் பெறுவர்” என அள்ளிவிடும் பிரதமர் மோடி, கடவுள் பேச வைப்பார் என விவாதம் மேற்கொள்ளாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும், வலுக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்த விழிப்புணர்வு, மோடி சாராத பல செய்தி நிறுவனங்களாலும், எதிர்க்கட்சி தலைவர்களாலும், முன்னெடுக்கப்பட்டு 2 வாரங்களை நெருங்கும் சூழலிலும், மோடியின் நிலை ‘மெளன’த்தைவிட்டு நகரவில்லை.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கடந்த மே 11 அன்று, முன்னாள் நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி. ஷா மற்றும் ஊடகவியலாளர் என். ராம் ஆகியோர், ராகுல் காந்தியிடமும், மோடியிடமும் நேரடி வாதம் வைக்குமாறு கோரியதற்கு, ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி,

“ராகுல் காந்தி வாதத்திற்கு ஒப்புதல் அளித்து, 13 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், அதற்கு 56 இன்ச் மார்பளவுடையவர் (மோடி) இன்று (24.05.24) வரை சவாலை எதிர்கொள்ள தயங்கி வருகிறார்” என தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை #DaroMat (என்றும் அச்சப்பட வேண்டாம்) என்ற Hashtag உடன் பதிவிட்டுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

banner

Related Stories

Related Stories