அரசியல்

முதலீட்டாளர்களை விட அதிக வருமானம் ஈட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு : கேள்விகளால் திக்குமுக்காடிய நிதியமைச்சர்!

பங்கு சந்தையில் முதலீடு செய்தவரின் கேள்விக்கு, பதிலளிக்க இயலாமல் சிரித்து மழுப்பிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

முதலீட்டாளர்களை விட அதிக வருமானம் ஈட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு : கேள்விகளால் திக்குமுக்காடிய நிதியமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய நிதியமைச்சர் பதவி வகிக்கும் நிர்மலா சீதாராமன்,

பல நேரங்களில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் அவதிக்குள்ளான மக்களுக்கு நிவாரண நிதி ஒதுக்காமல், நிவாரணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை ‘பிச்சை’ என இழிவாக பேசியது,

வெங்காய விலை உயர்வு குறித்து கேட்டதற்கு, நாங்கள் வெங்காயம் உண்ணும் பழக்கமில்லை என பதிலளித்தது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இருக்கின்றன.

இவை ஒரு புறம் இருக்க, GST வரி மூலம், இலட்சக்கணக்கான கோடிகளை மக்களிடமிருந்து ஈட்டி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. ஆனால், அதனை பிரித்து தருவதிலும் ஓரவஞ்சணையாக, தமிழ்நாடு தரும் ஒரு ரூபாய் வரிக்கு, ரூ. 29 பைசா என்றும், உத்தரப் பிரதேசம் தருகிற ரூ. 1க்கு, சுமார் ரூ. 3 என்றும் திருப்பி தருகிறது.

இது போன்ற ஓரவஞ்சணை எதற்கு என்று தமிழ்நாடு அரசு கேட்டதற்கு, நாங்கள் தாராளமாக தான் நிதி ஒதுக்குகிறோம் என அப்பட்டமான பொய்யை தெளித்து விட்டவர் தான் நிர்மலா சீதாராமன்.

இந்நிலையில், உழைக்கும் சமூதாயத்தை கடந்து, பங்கு சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களையும் GST எவ்வாறு பாதித்திருக்கிறது என்பது இரண்டு நாட்களுக்கு முன் (15 மே) நடந்த கருத்தரங்கின் வழி அம்பலப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களை விட அதிக வருமானம் ஈட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு : கேள்விகளால் திக்குமுக்காடிய நிதியமைச்சர்!

அக்கருத்தரங்கில், “ஒரு குழுமத்தில் மீது முதலீடு செய்பவர்கள் பெறும் இலாபத்தை விட, தரகராக இருக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசு, CGST, STT என பல வரி விதிப்பின் மூலம் அதிகமான வருவாயை ஈட்டுகிறதே.

ஒரு செலவும் இல்லாமல், வரி என்ற பெயரில் இது போன்று பல மடங்கு பணம் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு போகிறதே ஏன்?” என ஒரு முதலீட்டாளர் கேள்வி எழுப்பினார்.

உடனே, அந்த கேள்வியிலிருந்து நிர்மலா சீதாராமனை தப்பிக்க வைக்க, மேடையில் இருந்தவர்கள் முற்பட்ட போது, அதனை மறுத்து, ஏதோ பதலளிக்க முன்வருகிறது போல காட்சிப்படுத்திய நிர்மலா சீதாராமன், அதற்கு இங்கு பதிலளில்லை என சிரித்து மழுப்பினார்.

இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. பலரும், “நாட்டின் 1% முதலாளிகளையும், பா.ஜ.க.வையும் வாழ வைப்பதற்கு, உழைக்கும் சமூகத்தையும், நடுத்தர சமூகத்தையும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என்று தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories