அரசியல்

பணக்கட்டுகளை எண்ணுவதற்கு 10 ஆண்டுகள் செலவிட்ட மோடி : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில், முதலாளிகளை உலக பணக்காரர்களாக்கி, பண மழையில் கொழுக்கும் பா.ஜ.க.

பணக்கட்டுகளை எண்ணுவதற்கு 10 ஆண்டுகள் செலவிட்ட மோடி : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2014 மக்களவை தேர்தலில் அம்பானி, பின்பு பல நேரங்களில் அதானி என பணக்காரர்களை கூட்டாளிகளாக்கி, பா.ஜ.க பெற்ற தொகை ஏராளம் என்பது அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது.

அதில் பெரும் மோசடியாக, அண்மையில் தேர்தல் பத்திர மோசடி இருந்தது, உச்சநீதிமன்றத்தால் அம்பலப்பட்டு போனது.

அதன் வழி, தேர்தல் பத்திர விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த, SBI வங்கி வெளியிட்ட தகவல், இருக்கிற அரசியல் கட்சிகளிலேயே, அதிகப்படியான நன்கொடை பெற்ற கட்சி பா.ஜ.க தான் என தெளிவுபடுத்தியது.

எனினும், அதன் பிறகு மோடி ANIக்கு அளித்த பேட்டியில், தேர்தல் பத்திரத்தின் வழி, அதிகப்படியான நன்கொடை பெற்றது எதிர்க்கட்சிகளே என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவ்வாறு, பா.ஜ.க மீது வைக்கப்படுகிற பல குற்றச்சாட்டுகளை, எதிர்திசையில் திருப்பி வருவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளது பா.ஜ.க.

பணக்கட்டுகளை எண்ணுவதற்கு 10 ஆண்டுகள் செலவிட்ட மோடி : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

அதன்படி, இதுவரை அம்பானி - அதானி போன்றவர்களிடம் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுவிட்டு, தற்போது ”அம்பானி - அதானியிடம் டெம்போக்களில் கருப்புப் பணம் பெற்று வருகிறது காங்கிரஸ்” என எதிர்க்கட்சிகளின் மீது திசைதிருப்பியிருக்கிறார் மோடி.

அதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,“கடந்த 10 ஆண்டுகளை, பணக்கார நண்பர்களிடமிருந்து, டெம்போக்களில் பெற்ற பணக்கட்டுகளை எண்ணுவதற்கே செலவிட்டுள்ளார் மோடி. இந்த சதிகள் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அடித்தட்டு மக்களின் வாழ்வியலை சரிசெய்ய இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் வழிவகுக்கும்” என உறுதியளித்தார்.

இதனையடுத்து, ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தியையும், மோடியையும் ஊடகவியலாளர் தி இந்து - என். ராம் உள்ளிட்ட நிபுணர்கள் அழைக்க, அவ்வழைப்பை ஏற்றுள்ளார் ராகுல் காந்தி. ஆனால், அதற்கு இன்றளவும் மெளனம் காத்து வருகிறார் மோடி.

banner

Related Stories

Related Stories