அரசியல்

கருப்புப் பண டெம்போ குறித்து விசாரிக்க வேண்டும்! : ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்!

10 ஆண்டுகளுக்கு முன், கருப்புப் பணங்களை மீட்டெடுப்போம் என வாக்குறுதியளித்த மோடி, 10 ஆண்டுகளுக்கு பின், கருப்புப் பணம் குறித்து பேசியுள்ளார்.

கருப்புப் பண டெம்போ குறித்து விசாரிக்க வேண்டும்! : ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வேளையில்,

மோடியின் வெறுப்பு பேச்சுகளும், பொய்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன. எனினும், மோடி கூறிவந்த பொய்களில், சிறிதளவு உண்மையும் கசிந்து விட்டதோ என்று எண்ணும் வகையில்,

அதானி - அம்பானி போன்றவர்கள் தான் கருப்புப் பணத்தை டெம்போக்களில் அனுப்பி வருகிறார்கள் என்று மோடி தனது சகாக்கள் பற்றி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

இதுவரை, அதானி - அம்பானி என்றால், பா.ஜ.க எதையும் செய்து வந்ததற்கான, பின்னணி இது போன்ற டெம்போக்கள் தானா என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.

அதற்கு எடுத்துக்காட்டுகளாக, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான கோரிக்கை ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு வரும் நிலையில்,
அம்பானியின் மகன் திருமண கண்ணோட்ட நிகழ்ச்சிக்காக, குஜராத்தின் ஒரு உள்நாட்டு விமான நிலையத்தை, 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக மாற்றிய பா.ஜ.க.வின் நடவடிக்கை.

கருப்புப் பண டெம்போ குறித்து விசாரிக்க வேண்டும்! : ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்!

அதானிக்காக, இந்திய அரசின் சொத்துகளையே விற்று வரும் தன்மை ஆகியவை உள்ளன.

எனினும், இடைவிடாது அம்பானி - அதானி போன்ற முதலாளிகளை விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, அம்பானியும், அதானியும் கருப்புப் பணங்களை டெம்போக்களில் அனுப்பி வருகின்றனர் என பொருளற்ற ஒரு பரப்புரை செய்தார் மோடி.

இது குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், “ராகுல் காந்தி, அதானி - அம்பானி குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையிலும், ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டு வைத்துள்ளார் மோடி. எனினும், நாட்டின் பிரதமரே கருப்புப் பணங்கள் டெம்போக்களில் செல்கின்றன என தெரிவித்து விட்டார். இதற்கான உடனடி விசாரணையில் CBI மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து பல தலைவர்களும், பிரதமர் பதவியில் இருக்கும் மோடியே, அனைத்தையும் கருப்புப் பண விவகாரங்களையும் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories