அரசியல்

இந்தியா கூட்டணி ஆட்சியின் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்களில் திருத்தம் : ப.சிதம்பரம் உறுதி !

இந்தியா கூட்டணி ஆட்சியின் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்களில் திருத்தம் : ப.சிதம்பரம் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை சட்டங்களில் (CAA ) மாற்றத்தை கொண்டுவருவதாக அறிவித்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC) அறிமுகப்படுத்தியது. குடியுரிமை சட்டத்தில் மத ரீதியான பாகுபாடு கட்டப்படுவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சரத்துக்கள் இருப்பதாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டம் எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பேரிடர் வந்ததால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் தான் கொண்டுவந்த சட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக CAA சட்டம் நடைமுறை படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் உட்பட பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்த வந்த நிலையில், அதன்படியே கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது ஒன்றிய பாஜக அரசு.

இந்தியா கூட்டணி ஆட்சியின் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்களில் திருத்தம் : ப.சிதம்பரம் உறுதி !

சிறுபான்மையினருக்கு எதிரான CAA சட்டத்தை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு மாநிலங்கள் அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதற்கு கண்டனங்களும் எழுந்து வந்தது. இந்த நிலையில், தற்போது ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், CAA சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி ஆட்சியின் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்களில் திருத்தம் : ப.சிதம்பரம் உறுதி !

இதுகுறித்து அவர் பேசியதாவது, “ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், CAA சட்டம் ரத்து செய்யப்படும். பாஜக மக்களுக்கு எதிராக கொண்டு வந்த சட்டங்கள் அதிகளவு உள்ளது. எனவே அதை முழுவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்வது கடினம். அதனால்தான் ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். பாஜக கொண்டு வந்த சட்டங்கள் அனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், மறு ஆய்வு செய்யப்படும்." என்றார்.

banner

Related Stories

Related Stories