அரசியல்

தமிழ்நாட்டில் தொகுதி வாரி­யாக நடந்த வாக்­குப்­ப­திவு சத­வி­கி­தம் : முழு விவரம் என்ன ?

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்­நாட்­டில் பதி­வான மொத்த சரா­சரி வாக்­குப்­ப­திவு 69.46 சத­வீ­தம் என இந்­திய தேர்­தல் ஆணை­யம் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொகுதி வாரி­யாக நடந்த வாக்­குப்­ப­திவு சத­வி­கி­தம் : முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்­நாடு, புதுச்­சேரி உள்­ளிட்ட 21 மாநி­லங்­க­ளில் உள்ள 102 தொகு­தி­க­ளில் முதல்­கட்ட வாக்­குப்­ப­திவு நேற்று முன்­தி­னம் நடந்­தது.

தமிழ்நாட்டில் விறு­வி­றுப்­பாக நடந்த வாக்­குப்­ப­திவு மாலை 6 மணிக்கு முடி­வ­டைந்­தது. ஆனால் அப்­போ­தும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்­பட்­டது. எனவே 6 மணிக்கு முன் வந்­த­வர்­க­ளுக்கு டோக்­கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் 7 மணி நில­வ­ரப்­படி தமிழ்­நாடு முழு­வ­தும் 72.09 சத­வீத வாக்­கு­கள் பதி­வா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. இந்த நிலை­யில், தற்போது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்­நாட்­டில் பதி­வான மொத்த சரா­சரி வாக்­குப்­ப­திவு 69.46 சத­வீ­தம் என இந்­திய தேர்­தல் ஆணை­யம் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் 72.44 சத­வீத வாக்­கு­கள் பதி­வான நிலை­யில், தற்­போது 3 சத­வீத வாக்­கு­கள் குறை­வாக பதி வா­கி­யுள்­ளது.

தமிழ்நாட்டில் தொகுதி வாரி­யாக நடந்த வாக்­குப்­ப­திவு சத­வி­கி­தம் : முழு விவரம் என்ன ?

தமிழ்நாட்டில் தொகுதி வாரி­யாக நடந்த வாக்­குப்­ப­திவு சத­வி­கி­தம்.

திரு­வள்­ளூர் - 68.31 சத­வி­கி­தம், வட சென்னை - 60.13 சத­வி­கி­தம், தென் சென்னை - 54.27 சத­வி­கி­தம், மத்­திய சென்னை - 53.91 சத­வி­கி­தம், ஸ்ரீபெ­ரும்­பு­ தூர் - 60.21 சத­வி­கி­தம், காஞ்­சி­பு­ரம் - 71.55 சத­வி­கி­தம், அரக்­கோ­ணம் - 74.08 சத­வி­கி­தம், வேலூர் - 73.42 சத­வி­கி­தம், கிருஷ்­ண­கிரி - 71.31 சத­வி­கி­தம், தரு­ம­புரி - 81.48 சத­வி­கி­தம், திரு­வண்­ணா­மலை - 73.88 சத­வி­கி­தம், ஆரணி - 75.65 சத­வி­கி­தம், விழுப்­பு­ரம்- 76.47 சத­வி­கி­தம், கள்­ளக்­கு­றிச்சி - 79.25 சத­வி­கி­தம், சேலம்- 78.13 சத­வி­கி­தம், நாமக்­கல் - 78.16 சத­வி­கி­தம், ஈரோடு - 70.54 சத­வி­கி­தம், திருப்­பூர் - 70.58 சத­வி­கி­தம், நீல­கிரி - 70.93 சத­வி­கி­தம், கோவை - 64.81 சத­வி­கி­தம், பொள்­ளாச்சி -70.70 சத­வி­கி­தம், திண்­டுக்­கல் - 70.99 சத­வி­கி­தம், கரூர்- 78.61 சத­வி­கி­தம், திருச்சி -67.45 சத­வி­கி­தம், பெரம்­ப­லூர் - 77.37 சத­வி­கி­தம், கட­லூர் - 72.28 சத­வி­கி­தம், சிதம்­ப­ரம் - 75.32 சத­வி­கி­தம், மயி­லா­டு­துறை - 70.06 சத­வி­கி­தம், நாகப்­பட்­டி­னம் - 71.55 சத­வி­கி­தம், தஞ்­சா­வூர்- 69.18 சத­வி­கி­தம், சிவ­கங்கை - 63.94 சத­வி­கி­தம், மதுரை - 61.92 சத­வி­கி­தம், தேனி - 69.87 சத­வி­கி­தம், விரு­து­ந­கர் -70.17 சத­வி­கி­தம், ராம­நா­த­பு­ரம் -68.18 சத­வி­கி­தம், தூத்­துக்­குடி - 59.96 சத­வி­கி­தம், தென்­காசி - 67.55 சத­வி­கி­தம், திரு­நெல் வேலி - 64.10 சத­வி­கிதம்,கன்­னி­யா­கு­மரி - 65.46 சத­வி­கி­தம்.

banner

Related Stories

Related Stories