அரசியல்

தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார் மோடி? : தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி!

தமிழ் மிகவும் பழமையான மொழி, என்று தமிழ்நாடு வரும் போது புகழ்பாடும் மோடி, தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்ன செய்தார்.

தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார் மோடி? : தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த காலங்களில் இல்லாத அளவு, அண்மை காலங்களில், மோடியின் தமிழ்நாட்டு வருகை அதிகரித்துள்ளது.

மாவட்டம், மாவட்டமாக சென்று பேரணி, பிரச்சாரம் நடத்தும் மோடி, மற்ற மாநிலங்களில் பல பொய்களை அடுக்கிவைத்து, மயக்குகிறது போல, தமிழ்நாட்டிலும் தமிழ்ப்பற்றுள்ளவர் போல ஏமாற்றி வருகிறார்.

எனினும், அவ்வனைத்திலும் ஆரிய சிந்தனை உட்கருவாக செயல்படுகிறது என்பது, திருவள்ளுவருக்கு இடப்பட்ட காவி பூசல், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய பா.ஜ.க காண்பிக்கும் ஓரவஞ்சனை ஆகியவை மூலம் வெளிப்பட்டு வருகிறது.

அவ்வகையிலேயே, காசி தமிழ் சங்கம் என்ற வெற்று திட்டத்தை உருவாக்கி, தமிழை வளர்க்காமல், தமிழ்நாட்டில் உள்ள மக்களை வாரணாசிக்கு அழைத்து சென்று ஆரியத்தை வளர்த்து வருகிறது பா.ஜ.க.

இந்நிலையில், தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும் வளர்ப்பது போல, பிரச்சார மேடைகளில் நடத்தப்படும் மோடி நாடகம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இது குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, “கடந்த 10 ஆண்டுகாலமாக, பிரதமர் பதவி வகிக்கும் மோடி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு செய்தது என்ன?

தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார் மோடி? : தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி!

சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு, ஒன்றிய பா.ஜ.க அரசால் வழங்கப்படும் நிதியை விட 12 மடங்கு குறைவான நிதியே தமிழ் மொழி வளர்ச்சிக்கு வழங்கி வருகிறது பா.ஜ.க” என பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

சமஸ்கிருத மொழி என்பது, இந்தியாவில் இல்லை உலகிலேயே எவருக்கும் தாய் மொழி என அங்கீகரிக்கப்படாத மொழி. ஆரிய சிந்தனையாளர்களால் காக்கப்பட்டு வரும் ஒரு வெற்று மொழி. ஆரியர்களால் தெய்வ மொழி என புகழ்பாடப்படும் மொழி.

ஆனால், தமிழ் மொழியின் பெருமையும், மொழி வலுமையும் அவ்வாறு இல்லை. தமிழ் மொழி, உலக மொழிகளுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறந்த இலக்கண, இலக்கிய வல்லமை உடைய, பிற மொழி சார்ந்திராது, தனித்து வாழும் தன்மையுடையது.

இந்திய அரசால், செம்மொழி என அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஆட்சி மொழியாக இருக்கிற மொழி. சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் ஆட்சி மொழியாக விளங்குகிற மொழி. தென் ஆப்பிரிக்கா, மலேசியா நாடுகளில் சிறுபான்மையின மொழியாக திகழ்கிற மொழி.

இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, தன் கை காசை கொடுப்பது போல, பார்த்து பார்த்து கொடுக்கும் பா.ஜ.க அரசும், அதன் முகப்பாக செயல்படும் மோடியும் தமிழை பெருமையாக எண்ணுகிறோம் என கூறி வருவது அனைத்தும் பொய் பிரச்சாரமே என்பதை மக்கள் அறிவர் என தெரியாமல் பிதற்றி வருகிறார் மோடி.

banner

Related Stories

Related Stories