அரசியல்

பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரம் : வெளிக்காட்டிய ‘THE HINDU’ நாளிதழ்!

பொய் பிரச்சாரத்தால், மக்களை ஏமாற்றி விட எண்ணும் பா.ஜ.க. ஜனநாயக கடமையாற்றிய THE HINDU செய்தித்தாள் ஊடகம்.

பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரம் : வெளிக்காட்டிய ‘THE HINDU’ நாளிதழ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நோம் சோம்சுக்கி (Noam Chomsky) என்கிற அமெரிக்க சமூக ஆர்வலர் கூற்றுப்படி, ஒரு ஊடகம் என்றால், இந்தந்த தன்மைகளை கொண்டிருக்க வேண்டும் என்றும், அதில் இன்றியமையாத இடம், விளம்பரத்திற்கு உள்ளது என்றும் தெரித்தார்.

காரணம், ஒரு ஊடகம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால், அதற்கு நிதி பற்றாக்குறை இருந்திடக் கூடாது. நிதி பெற விளம்பரங்கள் தேவை என்பது தான்.

அவ்வாறு வேறு வழியின்றி நிதிக்காக மட்டுமே பெறப்படும் விளம்பரம், சனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது என்று அறிந்த 'THE HINDU' நாளிதழ், தனது ஊடக முதிர்வை, தெளிவுபட கையாண்டுள்ளது.

ஒன்றியத்தில், கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் அமர்ந்து கொண்டு, பா.ஜ.க அரசு எவ்வாறு ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கடனாளிகளாக்கியுள்ளது என்பது பரவலாக அறியப்பட்டாலும், பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரம் தடையில்லாமல் ஊர் ஊராய் பரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், தேசிய அளவில் புகழ்பெற்ற THE HINDU ஆங்கில நாளிதழிலும் தனது பொய் பிரச்சாரத்தை பரப்ப, “10 கோடிக்கும் அதிகமான தாய்மார்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியதன் மூலம் புகையில்லா சமையலறைகளை உறுதி செய்துள்ளோம்” என்ற வரிகளுடன் விளம்பரம் தந்துள்ளது பா.ஜ.க.

அதனை, நெருக்கடி காரணமாக மறுக்க இயலாத THE HINDU, விளம்பரத்திற்கு ஒப்புக்கொண்டு, உண்மையில் பா.ஜ.க குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. கடன் சுமையை தான் அதிகரித்திருக்கிறது என்ற தகவலுடைய கட்டுரையை முகப்பு பக்கத்தில் பதிவிட்டு, ஜனநாயக கடமையாற்றி இருக்கிறது THE HINDU.

பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரம் : வெளிக்காட்டிய ‘THE HINDU’ நாளிதழ்!

இதற்கு, பா.ஜ.க.வின் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர், தங்களது பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து தி.மு.க MP பி. வில்சன், “இந்திய குடும்பங்களின் கடன் சுமை சுமார் 40% உயர்ந்துள்ளது. வறுமை கூடிக்கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்ற பல தரவுகளுடைய உண்மை தகவலை, பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரத்துடன் இணைத்து பதிவிட்ட, 'THE HINDU’ ஊடகம், அருமையான செயலை செய்துள்ளது” என தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

THE HINDU நாளிதழின் இந்நடவடிக்கை மூலம், தேசிய ஊடகமாக செயல்படும் ஒரு நிறுவனம், விளம்பரத்திற்காக எதையும் செய்யும் என்று இல்லாமல், மோடியின் கைக்குள் இல்லாத தேசிய ஊடகங்களும் இந்தியாவில் உள்ளன என்ற நம்பகத்தன்மையை விதைத்திருக்கிறது.

சமூக வலைதளத்திலும், THE HINDU நாளிதழின் செயல் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories