அரசியல்

பா.ஜ.க என்கிற சலவை பொறியின் மூலம், சாயங்களை போக்கும் அரசியல் தலைவர்கள்! : குற்றவாளிகளின் கூடாரமான பா.ஜ.க!

தேர்தல் பத்திரத்தின் மூலம் பகல் கொள்ளை, சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறை, ஒடுக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள் என ஏற்கனவே அளவுகடந்த குற்றங்களை செய்து வரும் பா.ஜ.க.வில் கூடுதல் குற்றவாளிகள்.

பா.ஜ.க என்கிற சலவை பொறியின் மூலம், சாயங்களை போக்கும் அரசியல் தலைவர்கள்! : குற்றவாளிகளின் கூடாரமான பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தேர்தல் நேரங்களில், பொதுவாகவே கட்சி தாவல்கள் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால், அந்த கட்சி தாவல்கள், தனிப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையிலும், அல்லது மக்கள் நிலைப்பாட்டின் அடிப்படையிலும் தான் அமைந்து வந்தது.

ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குற்றவாளிகளுக்கென்று ஒரு கூட்டமும், அரசியலமைப்பை நிலைநாட்ட விரும்புபவர்களுக்காக ஒரு கூட்டமும் பிரிந்து செயல்பட்டு வருகிறது.

அதில், குற்றவாளிகளுக்கான கூட்டமாக, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணியும், அரசியலமைப்பை நிலைநாட்ட விரும்பும் கூட்டமாக, இந்தியா கூட்டணியும் விளங்கி வருகிறது.

எனினும், குற்றவாளிகளை கூட்டிக்கொண்டு போகும் பா.ஜ.க, குற்றங்களை எதிர்ப்பவர்கள் மீது தான் குற்ற தண்டனைகளை ஏவவிட்டு வருகிறது.

அதற்கான சான்றுகளே, ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் கைதுகள்!

குற்றவாளிகளின் கூட்டமாக பா.ஜ.க கூட்டணி இயங்கி வருவதற்கான சான்றுகளே, பா.ஜ.க.வின் கூட்டணியாகவும், கட்சியின் உறுப்பினர்களாகவும் இணைக்கப்பட்ட, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவன், அரியானாவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டல், முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் க்ருபா ஷன்கர், மேற்கு வங்கத்தின் 5 முறை சட்டமன்ற உறுப்பினர் தபாஸ் ராய், ஜார்கண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா கோடா, மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமை காவலர் தேபஷிஷ் தார் உள்ளிட்ட எண்ணற்றவர்கள்.

பா.ஜ.க என்கிற சலவை பொறியின் மூலம், சாயங்களை போக்கும் அரசியல் தலைவர்கள்! : குற்றவாளிகளின் கூடாரமான பா.ஜ.க!
Rahul Dewan

மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இவ்வனைவரும் ஊழல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என ஒன்றிய பா.ஜ.க அரசின் விசாரணை குழுக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். கடந்த காலங்களில் மோடியாலும், அவரது கட்சியாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள்.

தங்களை தற்காத்து கொள்ள, மக்கள் குறித்து எவ்வித கவலையில்லாமல், எந்த செயலிலும் ஈடுபடக்கூடியவர்கள். எனினும், மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். ஆகையால், பா.ஜ.க.வின் வெற்றி மோகத்தாலும், அடிமைவாத அரசியலை நிலைநாட்டுவதற்கும் இரையாக மாறியவர்கள்.

மேலும், பா.ஜ.க கட்சி, உண்மையாளர்களுக்கான கட்சி அல்ல. யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். பணயம் வைக்க வேண்டியது ஒன்று தான், அது மக்களின் உரிமைகள் மட்டும் தான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, “யார் வேண்டுமானாலும், பா.ஜ.க.வில் இணையலாம். அவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கும். அவர்கள் எத்தனை குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் சரி.”

இதனால், மக்கள் நலன் யாருக்கு முக்கியம் என்கிற பா.ஜ.க.வின் அலட்சிய போக்கு வெளிப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில், “என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது. இதில் இருக்கும் பெயர்கள் ஏதோ தேசத் தலைவர்களுடையதோ அல்லது சமூகச் சீர்திருத்தவாதிகளுடையதோ இல்லை.

எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! வரலாற்றுப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள்! இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், பா.ஜ.க.வின் உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா?” என்று தெரிவித்துள்ளார்.

இது போன்று, நாட்டில், சமநிலையை உண்டாக்குவோம், பெண் உரிமை காப்போம் என்று வெறும் வாய் பேச்சிற்கு கூவி வரும் பா.ஜ.க, உண்மையில் என்ன செய்கிறது என்ற செய்தி, கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories