அரசியல்

“இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?”-தமிழ் குறித்து நீலி கண்ணீர் வடிக்கும் மோடிக்கு முதல்வர் கேள்வி!

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?”-தமிழ் குறித்து நீலி கண்ணீர் வடிக்கும் மோடிக்கு முதல்வர் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அன்பு வைத்திருப்பது போல் பிரதமர் மோடி போலியாக பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறையும் வரும்போதெல்லாம், தமிழ் மக்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது போல் பேசி வருகிறார். ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாட்டிடம் ஒன்றிய பாஜக அரசு நடந்து கொள்கிறது.

அதன் வெளிப்பாடே மழை வெள்ளத்தின்போது தமிழ்நாட்டை எட்டிக்கூட பார்க்கவில்லை. மேலும் இதுவரை ஒன்றிய பாஜக அரசு வெள்ள நிவாரணமும் அறிவிக்கவில்லை. அடுத்தடுத்து என தொடர்ந்து சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய புயல், வெள்ளத்தை தேசிய பேரிடராகவும் அறிவிக்க முடியாது என்றும் மறுத்தது.

“இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?”-தமிழ் குறித்து நீலி கண்ணீர் வடிக்கும் மோடிக்கு முதல்வர் கேள்வி!

ஆனால் வரும் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து தொடர்ந்து வருகை தந்து, மேடையில் பிரசாரம் செய்தார். வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, உலகம் முழுவதும் பேசக்கூடிய தமிழ் மொழிக்கு மிகவும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்து தமிழ் குறித்து பெருமையாக பேசி வருகிறார் மோடி.

இப்படி மீனவர்கள் விவகாரம், மொழி, நிதி, வரி என பல விஷயங்களில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிடம் மட்டும் வேறுபாடு காட்டி வரும் சூழலில், தமிழ் தனது தாய் மொழியாக இல்லையே என்று மோடி நீலி கண்ணீர் வடித்து வருகிறார். இதற்கு மாநிலம் முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், மோடியின் பழைய வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

“நேற்று மாலைச் செய்தி:

தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி:

அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே.., கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. "எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!”

banner

Related Stories

Related Stories