அரசியல்

அம்பலமான பின்பும், அமலாக்கத்துறையின் அட்டூழியம் குறையவில்லை! : எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க!

எதிர்கட்சிகளை, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட விடாமல் தடுக்கும் பா.ஜ.க; எதிர்கட்சி வேட்பாளர்களையும் அச்சுறுத்தும் அவலம்!

அம்பலமான பின்பும், அமலாக்கத்துறையின் அட்டூழியம் குறையவில்லை! : எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், மக்களின் உரிமைகள், உடைமைகள் அனைத்தும் சூரையாடப்பட்டுள்ளன. எனினும், ஓரளவு அதிகார உரிமைகள் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மிச்சமிருந்தது.

இந்நிலையில், எதிர்கட்சிகளின் அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இந்தியா விடுதலையடைந்ததற்கு பின், மக்களாட்சி முறைப்படி, மக்களால் தேர்தெடுக்கப்படுபவர் ஆட்சியில் அமர்ந்து, மக்களுக்கான பணிகள் முன்னெடுக்க வேண்டும் என்ற முறை, இந்திய அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டது.

எனினும், இந்திய அரசியலமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் பா.ஜ.க, மக்களாட்சி என்ற அடிப்படை முறையிலும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

உதாரணமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளரை, தேர்தலுக்கு முன் அல்லது பின், அச்சமூட்டி தன் கட்சியின் பக்கம் ஈர்த்து, மக்களின் வாக்குகளை தவறாக பயன்படுத்தி வருகிறது பா.ஜ.க.

அண்மையில் கூட, ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அம்பா பிரசாத், பா.ஜ.க.வின் மக்களவை வேட்பாளராக போட்டியிடுமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்ததற்கு அமலாக்கத்துறை கொண்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அம்பலமான பின்பும், அமலாக்கத்துறையின் அட்டூழியம் குறையவில்லை! : எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க!

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் இந்தியா கூட்டணியில் பங்கு கொண்டுள்ள சிவ சேனா (UBT) கட்சி நிர்வாகி அமொல் கிர்டிகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே, அமலாக்கத்துறை கொண்டு மிரட்டியுள்ளது பா.ஜ.க.

இவ்வாறு, கட்சியின் தலைவர்களுக்கு அடுத்து, நிர்வாகிகளையும் அடக்கி ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளையும் முடக்கி, கட்சி வேலைகளில் ஈடுபடாதவாறு தடுத்துள்ளது.

இந்நடவடிக்கைகள், அரசியலமைப்பிற்கு புறம்பான நடவடிக்கைகள் என்று பல தேசிய ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிற நிலையிலும், தனது அதிகாரத்துவ அரசியலை தொடர்ந்து செயலாற்றி வருகிறது பா.ஜ.க.

தோல்வி அடையமாட்டோம், என்ற எண்ணத்த்தில் இவ்வகை செயல்களில் ஈடுபடும் பா.ஜ.க. தனது கட்சி உறுப்பினர்களையும், கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் கேள்வி கேட்காமல், ஊழலில் துவண்டிருக்க வழிவகுக்கவும் செய்துள்ளது.

அதன் வெளிப்பாடாகவே, அசாம் மாநில பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியின் நிர்வாகி பெஞ்சமின் என்பவர் பண குவியலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதான புகைப்படம், இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு சர்ச்சையாகியுள்ளது.

அம்பலமான பின்பும், அமலாக்கத்துறையின் அட்டூழியம் குறையவில்லை! : எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க!
banner

Related Stories

Related Stories