அரசியல்

சாதியவாத ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுமா? “அசாம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

உத்தரகாண்ட் மாநிலத்தை தொடர்ந்து, இஸ்லாமிய ஒடுக்குமுறை சட்டமான UCC-ஐ அமல்படுத்த முனையும் அசாம் பா.ஜ.க. எதிர்ப்பலையில் மக்கள்.

சாதியவாத ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுமா? “அசாம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஆங்கிலேயர் ஆட்சியில் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த இடம், 1937-இல் அசாம் மாநிலம் என அடையாளப்படுத்தப்பட்டது.

அசாமின் வடக்கே இமயமலையும், கிழக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா, பராக்கா ஆறுகள் பாயும் பள்ளத்தாக்கும் அதனையொட்டி மலைப்பகுதிகளும் அமைந்துள்ளன.

வடமேற்கில் பூடான் நாடும், தென் மேற்கில் வங்காள தேசமும் அமைந்துள்ளன.

சாதியவாத ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுமா? “அசாம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அசாமின் மக்கள்தொகை 3.11 கோடியாகவும், மொத்தமுள்ள 32 (தற்போது 35) மாவட்டங்களில் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 11 ஆக இருக்கிறது என்றும் 2011 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இச்சூழலில், அசாமில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பா.ஜ.க. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல திட்டங்களை அமல்படுத்தி அவர்களை ஒடுக்கி வருகிறது. மக்களை ஒதுக்குவதோடு நிற்காமல், கிறிஸ்தவ கல்வி நிலையங்களையும், இந்துத்துவவாதிகளைக் கொண்டு மிரட்டி, கல்வியிலும் காவியை பரப்ப முற்படுகிறது ஆர்.எஸ்.எஸ்-ம், பா.ஜ.க.வும்.

இவ்வாறான அடக்குமுறைகளை, எதிர்த்தால் கடுமையான சட்டம் பாய்ந்து, சிறைதண்டனைக்கு ஆளாவர் என்று மிரட்டி வருகிறார் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா. அவரின் கூற்றுப்படி, உரிமைக்குரல் எழுப்புபவர்கள் பலர் கைதும் செய்யப்பட்டு வருகின்றனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், “பகவத் கீதையின்படி, பார்ப்பனர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய மூன்று சாதியினருக்கும் சேவை செய்வது தான் சூத்திரர்களின் (பொதுமக்களின்) இயற்கையான கடமை” என்று அண்மையில் X-தளத்தில் பதிவிட்டிருந்தவரும் அசாம் முதலமைச்சர் ஹிமாந்த் பிஸ்வாஸ் தான்.

இது போன்ற வல்லாதிக்க நோக்கில் செயல்படும் தலைமை உள்ள மாநில பா.ஜ.க அரசு, ஒன்றிய பா.ஜ.க அரசின் அரசியலமைப்பிற்கு எதிரான சட்ட இயற்றங்களை, முதலில் வரவேற்கும் மாநிலமாகவும் அடையாளப்பட்டு வருகிறது.

அவ்வகையில், இந்தியாவில் வாழும் மக்களின் குடியுரிமையை பறிக்கும், தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC) சட்டத்தின் வழி, இதுவரை முகாம்கள் அமைத்து, 19 இலட்சத்திற்கும் மேலான மக்களை துரத்திய அரசாகவும், அசாம் பா.ஜ.க. அரசு இருக்கிறது.

NRC மூலம், இலட்சக்கணக்கானோரை வெளியேற்றிய பின், கூடுதலான ஆதிக்க அதிகாரத்தை நிலைநிறுத்த, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் பொது உரிமையியல் சட்டம் (UCC) ஆகியவற்றையும் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது பாசிச பா.ஜ.க.

சாதியவாத ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுமா? “அசாம்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

UCC செயல்படுத்துவதற்கு முன்னதான நடவடிக்கையாக, இஸ்லாமிய திருமணச் சட்டத்தை நீக்கி, சிறுபான்மையினர்களின் உரிமையை சூரையாடியுள்ளது பா.ஜ.க. கூடுதலாக, UCC-ன் மூலம் தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில், இணையர்களின் தகவல்களை அரசிற்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது பா.ஜ.க.

இவ்வகையான நடவடிக்கைகளால், நாட்டில் மிஞ்சியிருக்கும் விடுதலை உணர்வுகளும், மண்ணோடு மண்ணாகியிருக்கிறது.

இவ்வாறான, பிளவுவாதம் உண்டாக்குகிற ஆட்சி, பொருளாதாரத்தில் மட்டும் எவ்வாறு வளர்ச்சியடைய போகிறது என்ற வகையில், பொருளாதாரத்திலும், பின் தங்கியே உள்ளது அசாம்.

அதன் காரணமாகவே, மொத்த உள்நாட்டு உறுபத்தியில் (GDP) 18 ஆவது இடத்தில் இருக்கிற அசாம் மாநிலத்தின் மக்கள் தொகையில், 85.9% மக்கள் கிராமப்புறத்தையும், 14.1% மக்களே நகர்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

இதன் வழி, வளர்ச்சியில்லா நிலையில் தத்தளித்து வரும் ஒரு மாநிலத்தில், வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்காமல், பிளவுகளை உண்டாக்குவதையே முக்கிய குறிக்கோளாக வைத்து நகரும் பா.ஜ.க. அரசின் மீது, மக்களுக்கு அவநம்பிக்கை எழுந்துள்ளது.

இப்படியான மனிதகுல விரோதிகளின் ஆட்சியை தூக்கியெரிய மக்கள் தயாராகிவிட்டனர் என்பதை தான் தற்போதைய அசாம் அரசியல் சூழலும் உணர்த்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories