அரசியல்

கூட்டணி தாவல்களால், மாற்றத்தை நோக்கி, “பீகார்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இந்தியா கூட்டணிக்கு எதிராக தனித்து நின்றால், வெல்ல இயலாது என்று கூட்டுக்கொள்ளையில் ஈடுபடும் பீகார் அரசு. தனித்துவத்தால், முன்னோக்கி நகரும் இந்தியா கூட்டணியின் இராஷ்டிரிய ஜனதா தளம்!

கூட்டணி தாவல்களால், மாற்றத்தை நோக்கி, “பீகார்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

எங்கள் பெற்றோர் எங்களை பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளியின் காலை கூட்டத்திலேயே, சாதி வாரியாக மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள். யாதவ மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு மாடுகளை கவனிக்க அனுப்பப்படுவார்கள். நண்பகல் வகுப்பறைக்கு வந்து தூங்கவேண்டும். பிறகு மாலை வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படித்தான் அந்தந்த சாதி மாணவர்கள் அவரவர் குலத் தொழிலைச் செய்ய வேண்டும். அப்போதெல்லாம் ஆசிரியர் மேசையில் இருக்கும் புத்தகத்தை தொட்டாலே காது கிழிந்து விடும் அளவிற்கு திருகிவிடுவார்” இப்படி நடந்த பார்ப்பனக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தாம் அரசியலுக்கு வந்ததாக ஒருமுறை பேட்டியளித்திருந்தார் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்.

இது போன்ற சிந்தனையுடைய தலைவர்களை உருவாக்குவதிலும், சமூகநீதியை நிலைநாட்ட பல்வேறு போரட்டங்களை முன்னெடுப்பதிலும் தமிழ்நாட்டுடன் ஒத்திருக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது பீகார். ஆகவே, மதவெறிகொண்ட பா.ஜ.க, பீகாரை நேரடியாக வெல்லமுடியாது என்பதால் நிதிஷ்குமார் போன்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்களை பயன்படுத்தி குறுக்கு வழிகளில் பல முறை ஆட்சியை பிடித்துள்ளது.

அத்தகைய தனித்துவம் வாய்ந்த பீகார் மாநிலம் அமைந்துள்ள பகுதி, வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றிய பகுதியாகும். இங்கு தான், இந்தியா எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்னான நிலப்பரப்பில், மாபெரும் பேரரசாக விளங்கிய மெளரியர் ஆட்சியின் தலைமை இடம் அமைந்திருந்தது. புத்த மதம் வளர்ச்சியுற்ற இடமாகவும் இப்பகுதி கருதப்படுகிறது.

அதன் பிறகு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தலைமை மாகாணமாக விளங்கிய வங்காள மாகாணத்திலிருந்து, மார்ச் 22, 1912 அன்று பிரிக்கப்பட்ட பீகார், தனி மாகாணமாகவும், இந்தியா விடுதலையடைந்த பின், தனி மாநிலமாகவும் அடையாளப்பட்டு வருகிறது.

கூட்டணி தாவல்களால், மாற்றத்தை நோக்கி, “பீகார்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இம்மாநிலத்தின் பரப்பளவு தமிழ்நாட்டை விட சிறியதாக இருப்பினும், மக்கள் தொகையில் இரண்டாவது மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

எனினும், பீகாரின் மொத்த மக்கள் தொகையில், 11.29% மக்களே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவும், மீதமுள்ள 88.71% மக்கள் கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் உள்ளனர்.

ஆகையால், பொருளாதார நிலையிலும் சரி, கல்வி நிலையிலும் சரி, பீகாரின் நிலைப்பாடு சற்று பின் தங்கிய நிலையிலேயே நீடித்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி தரவரிசையிலும் 14 ஆவது இடத்தை தான் தக்கவைத்துள்ளது.

இவ்வாறு மக்கள் மற்றும் பொருளாதாரத்தின் நிலை பின்தங்கி இருப்பதற்கு, பீகாரின் தற்போதைய முதலமைச்சரான நிதிஷ் குமார், ஓர் முக்கிய காரணமாக விளங்குகிறார்.

இவரின் ஆதிக்க உணர்வின் வெளிப்பாடுகள், மக்களின் வளர்ச்சிப்பாதைக்கு முட்டுக்கட்டையாக அமைந்து வருகிறது.

வாக்குகள் குறைந்த அளவில் இருப்பினும், ஆட்சியை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்ற குதர்க்கம் தெரிந்த நிதிஷ் குமார். பெரும்பான்மை உறுப்பினர்களை தன் கட்சியில் வைத்துக்கொள்ளாத நிலையிலும், சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்து வருகிறார்.

இவரே, பீகாரை அதிக காலம் ஆட்சி செய்தவராகவும் இருக்கிறார். இந்த சூழலில், நிதிஷ்குமார் - பா.ஜ.க கும்பலிடமிருந்து பீகார் மக்களின் வளர்ச்சியை மீட்டெடுக்க, இராஷ்டிரிய ஜனதா தளம் பெரும் பங்காற்றி வருகிறது.

அதன் ஒரு அங்கமாகவே, நிதிஷ் குமார் கட்சி, இராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருக்கும் போது, தேஜஷ்வி துணை முதலமைச்சராக இருந்து 2022 - 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 4.5 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.

கூட்டணி தாவல்களால், மாற்றத்தை நோக்கி, “பீகார்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இதனால், மக்களின் நம்பிக்கையும் இராஷ்டிரிய ஜனதா தளத்தின் மீது அதிகரித்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் சாதிவாரி வாக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெறுமையும் பீகாரை சென்றடைய வித்திட்டவராக தேஜஷ்வி விளங்குகிறார்.

இவ்வாறான செயல்பாடுகளால், பீகார் மாநிலத்தை பொறுத்தவரை, பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருப்பினும், மக்கள் ஆதரவு இராஷ்டிரிய ஜனதா தளத்திற்கே அதிகம் இருக்கிறது.

இதற்கிடையில், ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையிலும் சிக்கல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. தொகுதி பங்கீட்டில், இரண்டு கட்சி நிர்வாகிகளிடத்தும் அதிருப்தி அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட பிளவாலும், இராஷ்டிரிய ஜனதா தளத்தின் மக்கள் வலுவாலும், எதிர்வரும் தேர்தல் இந்தியா கூட்டணிக்கு சாதகமாய் அமைந்துள்ளது.

அண்மையில் இராஷ்டிரிய தனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஷ்வியின் பேரணி முடிவு மாநாட்டில், இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட போது, கூடிய இலட்சக்கணக்கான மக்கள், இந்தியா கூட்டணி வலுவின் வெளிப்பாடாகவும் அமைந்தது.

‘அடைமழையில் அரிதாரங்கள் அழிந்து போகும்’ என்பதற்கேற்ப இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவு மழையால் பா.ஜ.க-வின் அரிதாரம் மட்டுமல்லாமல் நிதிஷின் அரிதாரமும் இந்த முறை கண்டிப்பாக அழிந்து போகும்.

banner

Related Stories

Related Stories