அரசியல்

"காணாமல் போகும் என்று சொன்னவர்கள்தான் காணாமல் போனார்கள்" - திமுக குறித்து பேசிய கி.வீரமணி !

திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள்தான் காணாமல் போனார்கள் என கி.வீரமணி கூறியுள்ளார்.

"காணாமல் போகும் என்று சொன்னவர்கள்தான் காணாமல் போனார்கள்" - திமுக குறித்து பேசிய கி.வீரமணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா சூரியச்சுடர் 49வது நிகழ்வாக "நெஞ்சுக்கு நீதி வழி! திராவிடமே ஒன்றியத்திற்கு ஒளி!" என்ற தலைப்பில் பொதுக்கூட்ட நிகழ்வு நடைபெற்றது.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கழக சட்டத்துறை துணை செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்துரு தலைமையில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் அகரம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் நீதியரசர்கள் கே.என்.பாஷா, ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய திருநாட்டில் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத மக்கள் முதல்வர் இருக்கிறார் என்றால் அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நம் முதல்வர் தான். திராவிட இயக்கம் என்று வந்தால் எல்லோரும் அடங்கி போய்விட மாட்டார்கள். கடவுளையும் பாதுகாப்பது திராவிட இயக்கம் தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். கொள்ளையடிக்கிறார்கள் என்று இங்கு வந்து பிரதமர் பேசுகிறார். ஆம், ஏழை எளிய மக்களின் இதயங்களை கொள்ளையடித்து கொண்டுதான் இருக்கிறோம்.. ஒன்றியத்திற்கும் சேர்த்து நம் தலைவர் கலைஞர் வழிகாட்டினார்.

எதிர்ப்பு வரும் போது தான் இந்த இயக்கத்திற்கு இளமை வரும். திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள் தான் காணாமல் போனார்கள். திமுக இயக்கம் காணாமல் போனதில்லை. பதவி போவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை, கொள்கை என்பது மிக முக்கியம். திராவிட இயக்கத்திற்கு மட்டுமே இது பொருந்தும்.

"காணாமல் போகும் என்று சொன்னவர்கள்தான் காணாமல் போனார்கள்" - திமுக குறித்து பேசிய கி.வீரமணி !

அனைவருக்கும் அனைத்தும் எனப்து தான் திராவிட மாடல் அரசு. குஜராத் மாடல் என மார் தட்டுகிறார்களே 40ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இன்று ஒப்படைக்க வேண்டிய தேர்தல் பத்திரம் தொடர்பான பட்டியலை ஒப்படைக்கவில்லை. ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ வாய்தா கேட்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதற்கு மிக முக்கிய காரணம் நம் தளபதி. 40க்கு40 என்பதற்கு தமிழ்நாடு ஆயத்தமாகி விட்டது. தென் நாட்டிலேயே காவிகளுக்கு கதவு சாத்தப்பட்டுள்ளது. பணத்தை கொண்டு வந்து வாரி இறைத்தாலும் அனுமதிக்க தயாராக இல்லை. வடபுறத்திலும் இப்போது பாஜகவிற்கு எதிர்ப்பு வந்துவிட்டது.

யார் வர வேண்டும் என்பதை விட யார் வர வேண்டாம் என்பதிலே தெளிவாக இருக்கிறோம். திராவிடம் இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வர முடியாது. 140 கோடி மக்களை உங்கள் குடும்பமாக நினைத்திருந்தால், தமிழ்நாடு மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார். பிரதமர் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வாருங்கள். அண்ணாமலை உங்கள் வாக்கை குறைத்ததை விட நீங்கள் வந்து கூடுதலாக குறைக்கிறீர்கள். திராவிடமும், மனிதநேயமும் பிரிக்க முடியாதது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories