அரசியல்

லலித் மோடி முதல் சண்டிகர் தேர்தல் அதிகாரி வரை... : “தேசவிரோத சக்திகளுக்காக வாதாடும் பன்சூரி ஸ்வராஜ்” !

தேசவிரோத சக்திகளுக்காக வாதாடும் பன்சூரி ஸ்வராஜை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவுக்கு ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.

லலித் மோடி முதல் சண்டிகர் தேர்தல் அதிகாரி வரை... : “தேசவிரோத சக்திகளுக்காக வாதாடும் பன்சூரி ஸ்வராஜ்” !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மக்களைவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தியா கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் கூட்டணிகளை உறுதிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து பாஜகவும் தேர்தல் பிரசாரம் மட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் பாஜக நேற்றைய முன்தினம் (02.03.2024) நாட்களுக்கு முன்னர் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. 195 வேட்பாளர்கள் பட்டியலில் நடப்பு எம்.பி-க்கள் சிலர் பெயர்கள் இல்லை. இதனால் தற்போதுள்ள எம்.பி-க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் எதிரொலியாக சிலர் கட்சியில் இருந்தும் விலகினர்.

இப்படியான சூழலில் ஒன்றிய அமைச்சராக இருக்கும் மீனாட்சி லேக்கியின் புதுடெல்லி மக்களவைத் தொகுதியில், மறைந்த முன்னாள் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் பாஜகவினரே கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், பன்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

லலித் மோடி முதல் சண்டிகர் தேர்தல் அதிகாரி வரை... : “தேசவிரோத சக்திகளுக்காக வாதாடும் பன்சூரி ஸ்வராஜ்” !

இதுகுறித்து டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் அதிஷி தெரிவிக்கையில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்த லலித் மோடி மீது பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பூதாகரமான நிலையில், நாட்டை விட்டே வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். லலித் மோடியின் பாஸ்போர்ட் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்குக்காக 2012-ம் ஆண்டு முதல் 2014 வரை லலித் மோடிக்கு வக்காலத்து வாங்கி கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வாதாடியவர்தான் இந்த பன்சூரி ஸ்வராஜ். இந்த வழக்கில் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு திரும்பவும் வெளிநாடு சென்றுள்ள லலித் மோடி, இதற்காக பன்சூரி ஸ்வராஜுக்கு நன்றியும் தெரிவித்தார்.

லலித் மோடி முதல் சண்டிகர் தேர்தல் அதிகாரி வரை... : “தேசவிரோத சக்திகளுக்காக வாதாடும் பன்சூரி ஸ்வராஜ்” !

இவ்வளவு ஏன், அண்மையில் நிகழ்ந்த மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக வாதாடினார். இப்போது அதே பெண், டெல்லி பெண்களிடம் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.

இதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சண்டிகர் மேயர் தேர்தலில், முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவித்த தேர்தல் அதிகாரிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக வாதாடியவரும் இவர்தான். இந்த வழக்கில் உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.

இதுபோன்ற பல தேசவிரோத சக்திகளுக்காக வாதாடி வரும் பன்சூரி ஸ்வராஜை பாஜக திரும்பப்பெற வேண்டும். பன்சூரியை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பாஜக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றார்.

banner

Related Stories

Related Stories