அரசியல்

“சில காரணங்களால் என்னால் போட்டியிட முடியாது...” : பின்வாங்கிய வேட்பாளர் - கலக்கத்தில் பாஜக தலைமை !

பாஜக அறிவித்த வேட்பாளர் ஒருவர் தான் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சில காரணங்களால் என்னால் போட்டியிட முடியாது...” : பின்வாங்கிய வேட்பாளர் - கலக்கத்தில் பாஜக தலைமை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடியவில்ல நிலையில், மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா என பல மாநிலங்களிலிருந்து மொத்தமாக 195 பேரை வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டில் யாரும் அறிவிக்கப்படவில்லை. பாஜக அறிவித்த 195 வேட்பாளர்களில் 28 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள் என்பதும், ஒரே ஒரு நபர் மட்டுமே இஸ்லாமியர் என்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

“சில காரணங்களால் என்னால் போட்டியிட முடியாது...” : பின்வாங்கிய வேட்பாளர் - கலக்கத்தில் பாஜக தலைமை !

இந்த நிலையில், பாஜக அறிவித்த வேட்பாளர் ஒருவர் தான் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அறிவித்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மேற்கு வங்கத்தின் அன்சோல் தொகுதி வேட்பாளராக போஜ்புரி பாடகர் பவன் சிங் அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவர் பெண்கள் குறித்து தவறாக பேசியதாக விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், அவர் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு கட்சியிலேயே கண்டனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து சன்சோல் தொகுதியில் போட்டியிட முடியாது என பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "பாஜக தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றி. பாஜக என்னை நம்பி அசன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. ஆனால், சில காரணங்களால் என்னால் அசன்சோல் தொகுதியில் போட்டியிட முடியாது" என்று அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories