அரசியல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், ‘112 மாநிலங்களவை உறுப்பினர்கள்’ தேர்வாக உள்ளனர்!

112 மாநிங்களவை உறுப்பினர்களில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்,  ‘112  மாநிலங்களவை உறுப்பினர்கள்’ தேர்வாக உள்ளனர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அவ்வகையில் 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 238 உறுப்பினர்கள் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களாலும், 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவராலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு என, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களவை தேர்தல் நடத்தப்பெறும். இம்முறைப்படி, 6 ஆண்டு பதவிக்காலம் முடிந்து 112 மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் நடக்க இருக்கிறது.

இதன் முதற்கட்ட தேர்தலில் 56 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும், அவர்களுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனு தாக்கல் செய்திருந்த பலரில், சோனிய காந்தி, நட்டா உள்ளிட்ட 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்,  ‘112  மாநிலங்களவை உறுப்பினர்கள்’ தேர்வாக உள்ளனர்!
ANI

இந்த 41 பேரில் பெரும்பான்மையானோர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து சில நாள்களுக்கு முன் பா.ஜ.க.வில் இணைந்தவர்களாக இருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பதவியையும், பணத்தையும் காட்டி பா.ஜ.க மற்ற கட்சியினரை தன்பக்கம் ஈர்த்து வருகிறது என்ற கூற்றுக்கிணங்க, பா.ஜ.க.வின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதில் கடந்த ஒரு மாத காலத்தில் காங்கிரஸ் இலிருந்து விலகி, பா.ஜ.க கூட்டணியில் இணைந்த அஷோக் சவான் மற்றும் மில்லிண்ட் டியொரா இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 15 உறுப்பினர்கள், பிப்ரவரி 27 தேர்தலுக்கு பின் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதையடுத்து ஏப்ரல் 2, 3 நாள்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து, தேர்தல் நடைபெற உள்ளது.

சுமார் 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் ஆட்சியில் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் மக்கள் விடுதலைபெறும் விதமாக, மக்களவை தேர்தல் நெருங்கிகொண்டிருக்கையில், மாநிலங்களவையிலும் மாற்றம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

banner

Related Stories

Related Stories