அரசியல்

பாரத ரத்னாவை அரசியலாக்கும் பா.ஜக.!

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை தங்களுக்கான அரசியல் கருவியாக ஒன்றிய பா.ஜ.க அரசு பயன்படுத்தி வருகிறது.

பாரத ரத்னாவை அரசியலாக்கும் பா.ஜக.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

10 ஆண்டுகால ஆட்சியில் மக்களின் எந்த எதிர்பார்ப்புகளையும் மோடி அரசு பூர்த்தி செய்யவில்லை. நாட்டை பாதுகாக்க பயன்படுத்த வேண்டிய அத்தனை விசாரணை அமைப்புகளையும் கொண்டு எதிர்க்கட்சிகளை எப்படி பழிவாங்கலாம் என்றே சிந்தித்து அதனை செயல்படுத்தியும் வந்துள்ளது.

குறிப்பாக ராணுவத்தை பயன்படுத்தி புல்வாமா, IT,ED,CBI ஆகியவற்றைக் கொண்டு எதிர்க்கட்சிகளை தொடர்ந்து பழிவாங்கி கொண்டிருக்கின்றது. கடைசியில் இந்தியாவில் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வைத்துபா.ஜ.க அரசியல் செய்து வருகிறது.

மத பாகுபாடு, வேளாண் துறையில் ஏற்படுத்தியுள்ள வீழ்ச்சி, மாநிலங்களில் ஆட்சி பறிப்பு உள்ள நிகழ்வுகளால் மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஏற்கனவே ஸ்க்ரீன் போட்டு பலவற்றை மறைத்த ஆட்சியாளர்கள்

போர்வை போட்டு மறைப்பது போல் பாரத ரத்னா விருது மூலம் மறைத்து விடலாம் என நினைக்கிறது. பாரத ரத்னா விருதை ‘வாக்கு கேட்கும்’ கருவியாக பயன்படுத்த எண்ணியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இதன் விளைவாக, பா.ஜ.க அரசியலான மத ஆளுமை, சிறுபான்மையினர்களுக்கு எதிரான சட்ட இயற்றம், ஏழைகளை கண்டுகொள்ளாத தன்மை ஆகியவற்றிற்கு முற்றிலும் தொடர்பில்லாத, சமத்துவவாதிகளை பெருமை படுத்தியுள்ளது.

பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ள கர்ப்பூர் தாகூர், சரண் சிங், மா.சா. சுவாமிநாதன் உள்ளிட்ட தகைசால் தலைவர்கள், நாட்டிற்களித்த நற்பணி என்பது முன்பே கண்டறியப்பட வேண்டியவை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை சூரையாடிவிட்டு, தற்போது இவர்களை பெருமை படுத்துகிறோம் என்று கூறியுள்ளது, பா.ஜ.க வின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

பாரத ரத்னாவை அரசியலாக்கும் பா.ஜக.!

பீகாரில் நிதிஷ் குமாரின் அரசியல் ஆட்டங்களாலும், பா.ஜ.க வின் சூழ்ச்சிகளாலும், பீகார் மக்களிடையே கடும் எதிரொளி எழுந்துள்ளது. இதனை வேறு வகையில் கையாள, வட மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை தாங்கிப்பிடித்த பீகாரைப் பிறப்பிடமாக கொண்ட கர்ப்பூர் தாகூரை பெருமை படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு.

இந்திய பொருளாதாரத்தில் வேளாண்மையின் வீழ்ச்சி, விவசாயிகள் வருமான இழப்பு ஆகியவை ஒருபுறம் இருக்க, நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் விவசாயிகள் மீது வன்முறை ஆட்டத்தை நிகழ்த்தி வருகிறது அதிகாரத்துவ ஒன்றியம்.

எனினும் ஆட்சி வகிக்க வேண்டும் என்ற ஆசையில், விவசாயிகளுக்கான நிதி ஆதாய தொகை, இலாப விழுக்காடு, வேளாண் புரட்சி ஆகியவற்றை பரைசாற்றிய மா.சா. சுவாமிநாதன் அவர்களுக்கு, விருது அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய உடன்பிறப்புகளின் வாழ்வாதாரம், மத ஆதிக்கத்தால் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனையும் சமன் செய்ய, இந்து - இஸ்லாமிய சகோதாரத்துவத்தை முன்மொழிந்த சரண் சிங் அவர்களை தூக்கிப் பிடித்துள்ளது பா.ஜ.க.

இவ்வாறு அரசியல் காரணங்களுக்காக, தலைவர்களையும், நாட்டின் உயரிய விருதையும் பயன்படுத்திகொள்ளும் செயல் கடும் பேச்சு பொருளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories