அரசியல்

தேச பக்தியை காட்டி இளைஞர்களை ஏமாற்றும் பாஜக : ராகுல் காந்தி MP பகிரங்க குற்றச்சாட்டு!

ஒன்றிய பா.ஜ.க அரசின் ‘அக்னி பாதை திட்டம்’ மூலம் ஏமாற்றப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்கள்.

தேச பக்தியை காட்டி இளைஞர்களை ஏமாற்றும் பாஜக :  ராகுல் காந்தி MP பகிரங்க குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“இந்தியாவின் 1% மக்களை அதிகாரத்திலும், பொருளாதரத்திலும் உச்சத்தில் வைத்திருப்பதற்காக, மற்றவர்களை நிராகரித்து வருகிறது பா.ஜ.க,” என ராகுல் காந்தி MP பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்.

இந்தியாவின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சார பேரணி மேற்கொண்டு வருகிறார். அப்போது திரண்டிருந்த மக்களை சந்தித்து பேசிய அவர், பா.ஜ.க எவ்வாறு சமூக - பொருளாதார கேடுகளை இழைக்கிறது என புள்ளி விவரங்களோடு எளிய முறையில் விவரித்தார்.

“இந்தியாவில் 1 விழுக்காட்டினருக்காகே ஒன்றிய பா.ஜ.க ஆட்சி நடத்துவதாகவும், அவர்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்டிட ஏணைய 99 விழுக்காட்டு மக்களின் உரிமைகளையும், வளங்களையும் சூரையாடி பெருமுதலாளிகளுக்கு வழங்குவதாக” ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

அதில் மிக முக்கியமாக ’அக்னிபாத்’ என்ற திட்டத்தின் மூலம் 10ஆம் வகுப்பு படித்த இளைஞர்களை பெருவாரியான எண்ணிக்கையில் சேர்க்க போவதாக ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2012 -ஆம் ஆண்டு அறிவித்தது. இதன் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் அதிக அளவில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். இது நம் பாதுகாப்பு துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த்தும் என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டது ஒன்றிய பா.ஜ.க அரசு

இந்த வேலைவாய்ப்பு பெரும் இளைஞர்களுக்கு மாதந்திர ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இது வரை இந்த திட்டம் தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் இல்லை. இந்த திட்டத்தின் பெயரை சொல்லி அப்பாவி இளைஞர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேச பக்தியை காட்டி இளைஞர்களை ஏமாற்றும் பாஜக :  ராகுல் காந்தி MP பகிரங்க குற்றச்சாட்டு!

பண மதிப்பிழப்பு, GST வரி விதிப்பு போன்றவை பணக்காரர்களுக்கான நடவடிக்கைகளே ஒழிய, சராசரி மக்களுக்கானது அல்ல. மக்களுக்கானதாக இருந்திருந்தால், 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்காது. மக்கள் போராட வீதிக்கு வந்திருக்க மாட்டார்கள்.”

“நிரவ் மோடி, லலித் மோடி மற்றும் அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பெற்ற கடனை திறுப்பி தராவிட்டாலும், வங்கிகள் அவர்களுக்கு கடன் தர தயாராக உள்ளன. ஆனால், அத்தியாவசிய தேவைக்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கோரும் கடன்களை பரிசீலனை செய்வதற்கு கூட தயாராக இல்லை.”

மேலும், ஒன்றிய அரசின் ‘அக்னி பாதை திட்டம்’ - ராணுவத்தில் தற்காலிகமாக சேர்க்கப்படும் இளைஞர்கள், தகுதியின் அடிப்படையில் நிரந்தரமாக பணியமர்த்தும் திட்டம். அதுவும் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களில் 25 விழுக்கட்டினருக்கே நிரந்தர பணியமர்த்தம், மற்றவர்களுக்கு வெளியேற்றம் என்பதான திட்டம் இது.

“இத்திட்டத்தின் வழி, முப்படைகளிலும் சுமார் 1.5 லட்சம் பேர் தகுதிபெற்றும், பணியில் அமர்த்தப்படாது வெளியேற்றப்பட்டுள்ளனர். இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண பா.ஜ.கவின் ஆட்சி முடிவுக்க வர வேண்டும்.”

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், முதலில் சாதி வாரி கணக்கெடுப்பு, பின்பு பொருளியல் சார்ந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அனைவருக்கும் சமத்துவத்தின் அடிப்படையில் சமவுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி MP.

banner

Related Stories

Related Stories