அரசியல்

கூட்டாட்சி உரிமைக்காக டெல்லியில் ஒலித்த ஒற்றுமை குரல் !

தி.மு.க, சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து, மாநிலங்களுக்கு நிதி வழங்க கோரி தில்லியில் போராட்டம்.

கூட்டாட்சி உரிமைக்காக  டெல்லியில் ஒலித்த ஒற்றுமை குரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மாநிலங்களுக்கு வழங்கும் நிதி பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை கண்டித்து கேரள சி.பி.எம். அரசு நடத்திய ’கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாநிலங்களுக்கு நிதி வழங்க கோரி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்.

அரசியலமைப்பின் படி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியில் மோசடி செய்கிறது ஒன்றிய அரசு.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிகப்படியான நிதி, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு மிகவும் குறைந்த நிதி என்ற ரீதியில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

45 ஆண்டுகள் காணாத மிகப்பெரிய 2 பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது, அதிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பவே 10 நாட்களுக்கு மேலானது. இந்த நிலையில் தான் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் வந்து பார்வையிட்டார், ஒன்றிய அரசின் குழு ஆய்வு செய்து ”இழப்புகள் மிக அதிகமாக இருக்கிறது அதிலிருந்து மக்களை மிகச் சிறப்பாக பாதுகாத்திருக்கிறது மாநில அரசு” என்றெல்லாம் செய்தியாளர்களின் சந்திப்பில் குறிப்பிட்டனர். பின்னர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். ஒரு நாள் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அருகில் இருந்து கோவிலுக்குள் சென்று உண்டியல் பணத்தை எப்படி வழங்குவது என்று வகுப்பெடுத்தார். ஆனாலும் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து கேட்ட நிவாரண நிதி மட்டும் வரவே இல்லை.

தமிழ்நாடு அனைத்து கட்சி குழு உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்திய போது 10 நாட்களில் நிதி வழங்கப்படும் என உறுதியளித்தார், ஆனால் இது வரஒ ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை எனக் கூறி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ஆர். பாலு, திரு. கனிமொழி, திரு. ஆ.ராசா, திரு. தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கருப்பு உடையணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடினர். ”அரசியல் அமைப்பை சீர்குலைக்காதே, மாநிலங்களை வஞ்சிக்காதே” போன்ற வாக்கியங்களுடைய பெயர்பலகைகளை கையில் ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கூட்டாட்சி உரிமைக்காக  டெல்லியில் ஒலித்த ஒற்றுமை குரல் !

அதன் பின், தில்லியின் ஜன்தர் மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் அநீதியை கடைபிடிக்கும் மோடி அரசை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “இந்திய அளவில் 70 கோடி மக்களின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம். அதற்காக நீங்கள் இந்த 70 கோடி மக்களையும் எதிரியாக பார்க்கிறீர்களா?” என்று ஒன்றிய பா.ஜ.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

மேலும், “வகுப்புவாதப்படுத்துதலை குறிக்கோளாக வைத்திருக்கும் சங்க பரிவார் போன்ற அமைப்புகளுக்கு, மக்களின் சிக்கல் தெரியப்போவதில்லை,” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, “ஜனநாயகத்தை காக்க வேண்டும். வடக்கு - தெற்கு என்ற பாகுபாடற்ற நிலை உருவாக வேண்டும். இது எங்கள் மக்கள் - எங்கள் நாடு, அமைதியாக இருக்க முடியாது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.

”இந்தியாவில் ஒரு முதல்வர் இருந்தார்... மத்திய அரசு தங்களை கடுமையாக வஞ்சிக்கிறது என்று பக்கம் பக்கமாக பேசினார்... எங்கள் மாநிலத்தின் வரிப்பணத்தை எடுத்து ஏதோ மாநிலங்களுக்கு வாரி இறைக்கிறார்கள் என பேசினார்.. அவர் வேறு யாரும் அல்ல தற்போது பிரதமராக உள்ள மோடி தான்..” என தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இன்றைய போராட்டத்தில் நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களின் முக்கியத்துவம் எதிரொலித்தது. அரசியல் சாசனக் கொள்கைகள் உறுதிசெய்யப்பட்டு நீதி கிடைக்கும் வரை நாம் ஒய மாட்டோம் என்ற எதிர்க்கட்சிகளின் குரல் ஒர் குரலில் ஒலித்தது.

மற்ற தேசிய தலைவர்களும் இதற்கு வழிமொழிந்து, போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

banner

Related Stories

Related Stories