அரசியல்

“கோழி பாஷையில் பேசுவதே, அந்த கோழியை வெட்டத்தான்..” - பிரதமரின் நாடகத்தை அம்பலப்படுத்திய தயாநிதி மாறன் MP!

தெற்கில் இருந்து வரும் நிதியில் இருந்து வடக்கு கொழிக்கிறது, செழிக்கிறது என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. விமர்சித்துள்ளார்.

“கோழி பாஷையில் பேசுவதே, அந்த கோழியை வெட்டத்தான்..” - பிரதமரின் நாடகத்தை அம்பலப்படுத்திய தயாநிதி மாறன் MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப் 1-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதுகுறித்து தயாநிதி மாறன் எம்.பி நாடாளுமன்றத்தில் பேசியதாவது, “பட்ஜெட்டில் மக்களுக்கு எதுவும் தரப்படவில்லை. ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்களுக்கு எதிரான பட்ஜெட்தான் இது. சமூக நலதிட்டங்கள், உணவு மானியம், உரம் மானியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிய பிரதமர் மோடி, இப்போது எந்த வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. ஆனால் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலை தருவதாக வாயல் வடை சுடுகிறார்கள்.

“கோழி பாஷையில் பேசுவதே, அந்த கோழியை வெட்டத்தான்..” - பிரதமரின் நாடகத்தை அம்பலப்படுத்திய தயாநிதி மாறன் MP!

விவசாய வருவாயை இரட்டிப்பாக்குவதாக கூறியது என்ன ஆனது?. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்துக்கு ஒரு பைசா கூட பாஜக அரசு தரவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் நிதி கேட்கிறோம். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சில் வன்மம்தான் இருக்கிறது; செயலில் எதும் இல்லை.

தெற்கில் இருந்து வரும் நிதியில் இருந்து வடக்கு கொழிக்கிறது, செழிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வழங்கும் வரிப்பணம் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசாதான் திரும்ப கிடைக்கிறது. அதுவே உ.பி-க்கு 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 73 காசுகள் கிடைக்கிறது. இந்தியா, ஒட்டுமொத்தமாக வளர வேண்டும். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தமிழ்நாட்டை வஞ்சிக்காதீர்கள்.

விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பிரதமரின் செல்ஃபி ஸ்டாண்டுக்கு ரூ.6.5 லட்சம் செலவு செய்கிறார்கள். இன்று 95% வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான் போட்டிருக்கிறார்கள். பிரதமர் விளம்பரம் செய்த Paytm, இன்று மோசடியில் சிக்கி உள்ளது.

“கோழி பாஷையில் பேசுவதே, அந்த கோழியை வெட்டத்தான்..” - பிரதமரின் நாடகத்தை அம்பலப்படுத்திய தயாநிதி மாறன் MP!

நீட் காரணமாக தமிழ்நாட்டிலும், ராஜஸ்தானின் கோட்டாவிலும் பல பேர் உயிரிழந்துள்ளனர். நீட்டை நீக்குவோம் என்று நிர்மலா அளித்த வாக்குறுதி இப்போது என்ன ஆனது? தமிழ்நாட்டிற்கு வந்தால் பிரதமர் தமிழில் பேசுகிறார். அதேபோல் கர்நாடகா சென்றால் கன்னடத்தில், கேரளா போனால் மலையாளம், ஆந்திரா சென்றால் தெலுங்கில், மேற்கு வங்கம் சென்றால் பெங்காலியில் பேசுகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் தமிழில் பேசுவதன் நோக்கமும் கோழி பிடிப்பவரின் நோக்கமும் ஒன்றுதான். கோழி பிடிப்பவர்கள் அதன் பாஷையில்தான் பேசி கூப்பிடுவார்கள். கோழியும் நம் பாஷையில் பேசுகிறார்களே என்று வரும். ஆனால் அவர் அந்த கோழியை கூப்பிட்டது அதை பிடித்து 65 போடுவதற்காக. மக்கள் கோழிகள் அல்ல என்பதை பிரதமர் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு இரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு செங்கலுக்கு மேல் உயரவில்லை. போதிய உள்கட்டமைப்பு இல்லாமல் மருத்துவக் கல்லூரி நடத்தக் கூடாது என்பது சட்டம். ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை இல்லாமல் ஒன்றிய அரசு கல்லூரி நடத்துகிறது. இது சட்டப்படி குற்றம். ஒன்றிய சுகாதாரத்துறை மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்ய வேண்டிய குற்றம்.” என்றார்.

banner

Related Stories

Related Stories