அரசியல்

"பாபர் மசூதி போல ஞானவாபி, மதுரா மசூதியும் வேண்டும்"- ஸ்ரீ ராம் ஜென்மபூமி பொருளாளர் கருத்தால் சர்ச்சை !

பாபர் மசூதி போல ஞானவாபியும், மதுரா மசூதியும் எங்களுக்கு வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொருளாளர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"பாபர் மசூதி போல ஞானவாபி, மதுரா மசூதியும் வேண்டும்"- ஸ்ரீ ராம் ஜென்மபூமி பொருளாளர் கருத்தால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னர் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது.அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது.

அதன் பின்னர் கடந்த மாதம் 22-ம் தேதி முழுமையாக கட்டிமுடிக்கப்படாத ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சூழலில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியும் ஹிந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பினர் கூறிவந்தனர்.

"பாபர் மசூதி போல ஞானவாபி, மதுரா மசூதியும் வேண்டும்"- ஸ்ரீ ராம் ஜென்மபூமி பொருளாளர் கருத்தால் சர்ச்சை !

இது தொடர்பாக நடந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாபர் மசூதி போல ஞானவாபியும், மதுரா மசூதியும் எங்களுக்கு வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொருளாளர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகராஜ், " மூன்று கோயில்களும் (அயோத்தி, ஞானவாபி, மதுரா) திரும்பக் கிடைத்த வேண்டும். அவை கிடைத்து விட்டால், மற்ற கோயில்களை நாங்கள் பார்க்கமாட்டோம். ஏனெனில், நாம் எதிர்காலத்தில் வாழவேண்டுமே தவிர கடந்த காலத்தில் அல்ல. நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும். எனவே,

இந்த மூன்று கோயில்களையும் சம்மந்தப்பட்டவர்கள் அமைதியான முறையில் திரும்பக் கிடைத்துவிட்டால், மற்ற அனைத்தையும் நாங்கள் மறந்து விடுவோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories