அரசியல்

ஜார்க்கண்ட் அரசியல் : மண்ணை கவ்விய பாஜக... பெரும்பான்மை நிரூபித்த சம்பாய் சோரன் அரசு !

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் அம்மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன்.

ஜார்க்கண்ட் அரசியல் : மண்ணை கவ்விய பாஜக... பெரும்பான்மை நிரூபித்த சம்பாய் சோரன் அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், கடந்த ஜன 31-ம் தேதி அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டார். நில மோசடி தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சியினரை பாஜக குறி வைத்து ED, CBI உள்ளிட்டவைகளை ஏவி மிரட்டி அடிபணிய வைக்க முயன்று வருகிறது. இந்த சூழலில் நில மோசடி என்று கூறி ஜார்க்கண்ட் முதல்வரை கைது செய்துள்ளது பாஜக அரசு. தான் கைது செய்யப்படுவதை உணர்ந்த ஹேமந்த் சோரன், தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, சம்பாய் சோரனை முதலமைச்சராக நியமிக்குமாறு அம்மாநில ஆளுநரிடம் பரிந்துரை செய்தார்.

ஹேமந்த் சோரன் - சம்பாய் சோரன்
ஹேமந்த் சோரன் - சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி உள்ளிட்ட கூட்டணி ஆட்சி அம்மாநிலத்தில் நடைபெறும் நிலையில், சம்பாய் சோரன் பெரும்பான்மை பெற்று பதவியேற்க தயாராக இருந்தார். ஆனால் பதவியேற்புக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சுமார் 20 மணி நேரம் கழித்து பதவியேற்புக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி கடந்த பிப் 2-ம் தேதி சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். எனினும் அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளது, அனைவர் மத்தியிலும் மேலும் கண்டனங்களை வலுத்தது. இதனால் பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க அம்மாநில கூட்டணி கட்சி உட்பட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஐதராபாத்தில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜார்க்கண்ட் அரசியல் : மண்ணை கவ்விய பாஜக... பெரும்பான்மை நிரூபித்த சம்பாய் சோரன் அரசு !

இதைத்தொடர்ந்து இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவையில் கூடியுள்ளனர். அதில் கைது செய்யப்பட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டார். தொடர்ந்து தற்போது அம்மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அப்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சம்பாய் சோரனுக்கு ஆதரவாக நின்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தேவையான நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு 47 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ளனர். மொத்தம் 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இந்தியா கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதனால் பெரும்பான்மை நிரூபித்து சம்பாய் சோரன் முதலமைச்சராக தொடர்கிறார்.

banner

Related Stories

Related Stories