அரசியல்

கூட்டணி கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பாஜக MLA கைது : மகாராஷ்டிர கூட்டணி அரசில் குழப்பம் !

மகாராஷ்டிராவில் ஷிண்டே தரப்பு நிர்வாகி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பாஜக MLA கைது : மகாராஷ்டிர கூட்டணி அரசில் குழப்பம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

அங்கு இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக ஷிண்டேவின் சிவசேனாவுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், ஆட்சியை முழுமையாக பாஜகவே கட்டுப்படுத்துகிறது என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கூட்டணியில் குழப்பங்கள் தொடர்ந்து எழுந்தன.

கூட்டணி கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பாஜக MLA கைது : மகாராஷ்டிர கூட்டணி அரசில் குழப்பம் !

இந்த நிலையில், ஷிண்டே தரப்பு நிர்வாகி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும், பாஜக எம்.எல்.ஏ கணபதி கெய்க்வாட் என்பவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது.

இந்த சூழலில் இருவரும் அல்காஸ் நகர் காவல்நிலையத்தில் வேறு வேறு பிரச்சனைகளுக்காக புகார் அளிக்க வந்துள்ளனர். அப்போது இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக எம்.எல்.ஏ கணபதி கெய்க்வாட் ஷிண்டே தரப்பு நிர்வாகி மகேஷ் கெய்க்வாட்டை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட்டை அங்குள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் பாஜக எம்.எல்.ஏ கணபதி கெய்க்வாட் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு காரணமாக மாநிலத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories