அரசியல்

இந்தியில் விமர்சித்த பாஜக... ஒரே Photo மூலம் பதிலடி... இணையத்தில் கலக்கும் அமைச்சர் உதயநிதி !

இந்தியில் விமர்சித்து கருத்து பதிவிட்ட பாஜகவுக்கு, அமைச்சர் உதயநிதியின் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியில் விமர்சித்த பாஜக... ஒரே Photo மூலம் பதிலடி... இணையத்தில் கலக்கும் அமைச்சர் உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி பகுதியில் 16-ம் நூற்றாண்டைத் சேர்ந்த பாபர் மசூதி இருந்தது. ஆனால் அந்த இடத்தில்தான் இராமர் பிறந்ததாகவும், அதனை திரும்ப இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். மேலும் அது பெரிய கலவரமாக மாறி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்வ அமைப்புகள் அதனை இடித்தனர்.

இந்த சம்பவத்தில் பல மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கே இராமர் இருந்ததாகவும், அதனால் அங்கே இராமர் கோயில் கட்டப்போவதாகவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த சூழலில் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட அனுமதித்து 2019-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தியில் விமர்சித்த பாஜக... ஒரே Photo மூலம் பதிலடி... இணையத்தில் கலக்கும் அமைச்சர் உதயநிதி !

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த ஆண்டே கொரோனா பேரிடரின்போது அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் இராமர் கோயிலின் பணிகளை பாஜக அரசு மேற்கொண்டது.

தொடர்ந்து தற்போது இந்த கோயிலின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக ஒன்றிய பாஜக அரசு இன்று இதன் திறப்பு விழாவை நடத்தியுள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்தியில் விமர்சித்த பாஜக... ஒரே Photo மூலம் பதிலடி... இணையத்தில் கலக்கும் அமைச்சர் உதயநிதி !

இந்த நிலையில், நேற்று இரவு பாஜகவின் அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் அமைச்சர் உதயநிதி குறித்து இந்தி மொழியில் விமர்சித்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த பதிவை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "ஹிந்தி தெரியாது போடா.." என்று வாசகம் பொருந்திய உடையை அமைச்சர் உதயநிதி அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் உதயநிதியின் இந்த பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது அமைச்சர் உதயநிதியின் பதிவு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பாஜகவின் பதிவை விட, அமைச்சர் உதயநிதியின் பதிவு அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories