அரசியல்

ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தை விவாதிக்க மறுக்கும் ஊடகங்கள் - ஆனால் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தை ஊடகங்கள் விவாதிக்க மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தை  விவாதிக்க மறுக்கும் ஊடகங்கள் - ஆனால் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசு கேள்வி கேட்ட 141 எம்.பிக்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்துள்ளது. இன்று கூட 2 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திர்ணாமூல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப்தன்கத்தை விமர்சிக்கும் விதமாக மிமிக்கிரி செய்துள்ளார்.

இதையடுத்து கல்யாண் பானர்ஜியின் செயலுக்கு குடியரசு தலைவர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஊடகங்கள் உண்மை தெரியாமல் மிமிக்கிரி பிரச்சனையை விவாதித்து வருகிறது என ராகுல் காந்தி விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தை  விவாதிக்க மறுக்கும் ஊடகங்கள் - ஆனால் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தை ஊடகங்கள் விவாதிக்க மறுக்கிறதே என்ற வேதனையோடு நாடாளுமன்றத்திற்கு வெளியே எம்.பிக்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் மிம்கிரி பிரச்சனையை உருவாக்கி ஊடகங்கள் விவாதிக்கிறது. திரினாமூல் எம்.பி மிமிக்கிரி செய்த வீடியோவை நான் தான் எடுத்தேன். என் தொலைபேசியில் தான் இருக்கிறது. ஆனால் சில நிமிடங்கள் இருக்கும் வீடியோவை வைத்துக்கொண்டு ஊடகங்கள் உண்மை தெரியாமல் விவாதித்து வருகிறது.

150 எம்.பிக்கள் நாடாளுமன்ற அவையிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள் அதை பற்றி ஊடகங்கள் விவாதிக்கவில்லை. அதானி செய்த முறைகேடுகள், ரபேல் ஊழல், வேலைவாய்ப்பின்மை பற்றியெல்லாம் ஊடகங்கள் பேசுவதே இல்லை. ஆனால் மிம்கிரி பிரச்சனையை விவாதிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories