அரசியல்

"நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் என கூறியுள்ளது டெல்லி போலிஸ்" - காங். பொதுச்செயலாளர் விளக்கம் !

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ்தான் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

"நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் என கூறியுள்ளது டெல்லி போலிஸ்" - காங். பொதுச்செயலாளர் விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 13-ம் தேதி நடைபெற்று கொண்டிருந்து . அப்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய 2 நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்தனர்.அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே, தாங்கள் கொண்டு வந்த புகை குண்டுகளையும் வெடிக்க செய்தனர்.

இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களை அங்கிருந்த சில எம்.பிக்கள் துரத்தி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரிக்கையில், 5 பேர் சேர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்டதும்,இந்த தாக்குதலுக்கு 18 மாதங்களாக அந்த கும்பல் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இந்த நபர்களுக்கு கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவே பாஸ் வழங்கியதும் விசாரணையில் வெளிவந்தது. பின்னர் 14-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விவாதம் செய்யவும், உள்துறை அமித்ஷா பதவி விலகவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

"நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் என கூறியுள்ளது டெல்லி போலிஸ்" - காங். பொதுச்செயலாளர் விளக்கம் !

இதனால் கோபமடைந்த சபாநாயகர் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த 15 எதிர்க்கட்சி எம்.பி.-க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதுகுறித்து விமர்சித்து வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள் காங்கிரஸ் இந்த சம்பவத்தை அரசியலாக்குவதாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ்தான் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கவில்லை. அதனை பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி போலீஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

இது பயங்கரவாத தாக்குதல் என்றும் நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதால் அரசு தரப்புக்கு நாங்கள் எங்கள் கவலையைத் தெரிவித்துள்ளோம். புதிய நாடாளுமன்றம் உலகின் பாதுகாப்பு மிக்க இடமாக இருக்கும் என்று கூறினர். ஆனால் மறுநாளே இந்த சம்பவம் நிகழ்ந்தது பாதுகாப்புக் குறைபாட்டினால்தான். இதனை குறித்து கேள்வி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இழைத்த தவறுதான் என்ன?'' என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories