அரசியல்

5 மாநிலங்களில் பாஜகவை விட அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் - ஆதாரத்தோடு பதிவிட்டுள்ள கே.எஸ்.அழகிரி !

5 மாநிலங்களில் பாஜகவை விட அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் - ஆதாரத்தோடு பதிவிட்டுள்ள கே.எஸ்.அழகிரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்திலும் வெற்றிபெற்றது. அதே நேரம் இந்த மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவை விட காங்கிரஸ் பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளது.

அதாவது, சத்தீஸ்கர் மாநிலத்தில் 66,02,586 வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது, அதே போல72,34,968 வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 1,75,71,582 வாக்குகளை காங்கிரஸ் பெற, 2,11,16,197 வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 1,56,67,947 வாக்குகளை காங்கிரஸ் பெற்ற நிலையில், பாஜக 1,65,24,787 வாக்குகளை பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 92,35,792 வாக்குகளை காங்கிரஸ் பெற, பாஜகவோ 32,57,511 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

மேலும் மிசோரம் மாநிலத்தில், காங்கிரஸ் 1,46,113 வாக்குகளை பெற்ற நிலையில், வெறும் 35,524 வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. இதன் மூலம் 5 மாநில தேர்தல்களில் சுமார் 4.92 கோடி வாக்குகளை காங்கிரஸ் கட்சியும், 4.81 கோடி வாக்குகளை பாஜகவும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி " தோல்வி அல்ல, எச்சரிக்கை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் 4.81 கோடி வாக்குகள் பெற்ற பா.ஜ.க. 342 இடங்களையும், 4.92 கோடி வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 235 இடங்களையும் பெற்றுள்ளன. பத்தரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்ற காங்கிரஸை போல சற்றேறக்குறைய ஒன்றரை மடங்கு சட்டமன்ற இடங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது. இது தான் இன்றைய தேர்தல் முறையில் வெற்றி தோல்விகள் அமைகின்றன.

இதில் உண்மை நிலை என்னவென்றால் இன்றைய தேர்தல் முறையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. மாறாக, தேர்தல் கணக்குகளை சரியாக கையாள தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய வெற்றியை தான் பா.ஜ.க. பெற்றிருக்கிறது. எனவே, மக்கள் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற கருத்து மிக மிக தவறானது. ஆனாலும் இது தோல்வியாக இல்லையென்றாலும் முடிவுகளை எச்சரிக்கையோடு காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories