அரசியல்

உங்கள் செல்போன் Hack செய்யப்படலாம்: எதிர்கட்சி MP-களுக்கு வந்த அலர்ட் - ஐபோன் நிறுவனத்தின் விளக்கம் என்ன?

அரசாங்க ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் உங்கள் செல்போனை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெறலாம் என எதிர்கட்சி MP-களுக்கு அலர்ட் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் செல்போன் Hack செய்யப்படலாம்: எதிர்கட்சி MP-களுக்கு வந்த அலர்ட் - ஐபோன் நிறுவனத்தின் விளக்கம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

மேலும் இந்த பட்டியலில் பல சமூக செயற்பாட்டாளர்களின் எண்களும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் செல்போன் தரவுகளும் வேவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இது குறித்து பாஜக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை எழுப்பினர். ஆனால் இது குறித்து ஒன்றிய அரசு அப்போது எந்த பதிலும் அளிக்கவில்லை.

உங்கள் செல்போன் Hack செய்யப்படலாம்: எதிர்கட்சி MP-களுக்கு வந்த அலர்ட் - ஐபோன் நிறுவனத்தின் விளக்கம் என்ன?

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பிக்களின் ஆப்பிள் போன்களுக்கு அரசாங்க ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் உங்கள் செல்போனை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெறலாம் என்று கூறி அலர்ட் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா போன்ற முக்கிய எதிர்கட்சி தலைவர்களுக்கு இதுபோன்ற அலர்ட் வந்துள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஐபோன் நிறுவனம், ”ஆப்பிள் அனுப்பும் எச்சரிக்கைகள் எந்த குறிப்பிட்ட அரசையும் குறிப்பிடுவன அல்ல. அரசு ஆதரவில் நடத்தப்படும் செல்பேசி தாக்குதல்கள் மற்றும் ஊடுருவல்கள் பெரும் நிதி ஆதரவில் நவீன தொழில்நுட்பம் கொண்டு நடத்தப்படுபவை. அவை மேம்பட்டுக் கொண்டே இருக்கும். அத்தகைய தாக்குதல்களை கண்டறிவது அச்சுறுத்தலை கண்டறியும் தொழில்நுட்பத்தை சார்ந்த விஷயம். அந்த நுட்பமும் முழுமையானதோ முற்றானதோ கிடையாது.

ஆப்பிளின் சில எச்சரிக்கைகள் உண்மையாக இல்லாமலும் இருக்கலாம். சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் கூட இருக்கலாம். ஆனால் அத்தகைய எச்சரிக்கைச் செய்திகளை வெளியிடுவதற்கான காரணத்தை நாங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் அரசு ஆதரவில் நிகழ்த்தப்படும் செல்பேசி தாக்குதல்கள் எதிர்காலத்தில் கண்டறியப்படாத வண்ணம் மேம்படுத்தப்படுவதற்கு அது உதவிடக் கூடும்.” என்று கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories