அரசியல்

5 மாநில சட்டபேரவை தேர்தல் : முதற்கட்ட வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் !

5 மாநில சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு 3 மாநிலத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

5 மாநில சட்டபேரவை தேர்தல் : முதற்கட்ட வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஆட்சி நிறைவடையவுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் தேதியை அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது.

5 மாநில சட்டபேரவை தேர்தல் : முதற்கட்ட வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் !

இந்த சூழலில் இன்று மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச தேர்தலுக்கான 144 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலையும், தெலங்கானா தேர்தலுக்கான 55 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலையும், சத்திஸ்கர் மாநில தேர்தலுக்கான 30 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் போட்டியிடுகிறார். 2013-ல் நடைபெற்ற அம்மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் கமல்நாத் வெற்றி பெற்றார். இந்த சூழலில் தற்போது மீண்டும் அவரே போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories