அரசியல்

பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு: “சஸ்பெண்ட் செய்ய குரலெழுப்பிய இந்தியா கூட்டணி” - கனிமொழி எம்.பி கடிதம் !

நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை தரக்குறைவாக பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும். என இந்தியா கூட்டணி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு: “சஸ்பெண்ட் செய்ய குரலெழுப்பிய இந்தியா கூட்டணி” - கனிமொழி எம்.பி கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி (இன்று) வரை நடைபெறவுள்ளது. தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 19-ம் தேதி மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய முன்தினம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையில் அனைவர் ஆதரவோடு நிறைவேறியது.

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பாராட்டு தெரிவித்து உரையாற்றினர். அந்த சமயத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு: “சஸ்பெண்ட் செய்ய குரலெழுப்பிய இந்தியா கூட்டணி” - கனிமொழி எம்.பி கடிதம் !

இதுகுறித்து பாஜகவை சேர்ந்த எம்.பி., ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் அவரது மதத்தை குறிப்பிட்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு: “சஸ்பெண்ட் செய்ய குரலெழுப்பிய இந்தியா கூட்டணி” - கனிமொழி எம்.பி கடிதம் !

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. அதோடு இதுகுறித்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக கண்டன குரல்கள் ஓங்கியுள்ளது. பாஜக எம்பி அவதூறாக பேசிக்கொண்டிருக்கையில், அவரது பின்னால் இருந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ஹர்ஷ் வரதன் உள்ளிட்டோர் சிரித்து ஊக்கப்படுத்தும் விதமாக நடந்துகொண்டனர். இதற்கும் தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.

பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு: “சஸ்பெண்ட் செய்ய குரலெழுப்பிய இந்தியா கூட்டணி” - கனிமொழி எம்.பி கடிதம் !

இந்த நிலையில், பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன், இந்தியா கூட்டணி காட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் டேனிஷ் அலியை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க எம்.பி. ரமேஷ் பிதுரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் கனிமொழி எம்.பி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பாஜக எம்.பி ரமேஷ் பிதுர் பேசியதற்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் தனது கருத்துக்கு ரமேஷ் வருத்தம் தெரிவிக்கவில்லை. இதனால் தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவ்வாறு பேசியதற்கு ரமேஷ் விளக்கமளிக்குமாறு பாஜக தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories