அரசியல்

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு : கொந்தளிக்கும் தலைவர்கள்.. குவியும் கண்டனங்கள் !

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த எம்.பியை, நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதுரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு : கொந்தளிக்கும் தலைவர்கள்.. குவியும் கண்டனங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி (இன்று) வரை நடைபெறவுள்ளது. தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 19-ம் தேதி மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய முன்தினம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையில் அனைவர் ஆதரவோடு நிறைவேறியது.

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பாராட்டு தெரிவித்து உரையாற்றினர். அந்த சமயத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு : கொந்தளிக்கும் தலைவர்கள்.. குவியும் கண்டனங்கள் !

இதுகுறித்து பாஜகவை சேர்ந்த எம்.பி., ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் அவரது மதத்தை குறிப்பிட்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. அதோடு இதுகுறித்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக கண்டன குரல்கள் ஓங்கியுள்ளது. பாஜக எம்பி அவதூறாக பேசிக்கொண்டிருக்கையில், அவரது பின்னால் இருந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ஹர்ஷ் வரதன் உள்ளிட்டோர் சிரித்து ஊக்கப்படுத்தும் விதமாக நடந்துகொண்டனர். இதற்கும் தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், "பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி, நாடாளுமன்றத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனையும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். பாஜக ஏன் அவரை இடைநீக்கம் செய்யாமல் இன்னும் பாதுகாத்து வருகிறது? இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது." என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து "இரண்டு முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், ரவிசங்கர் பிரசாத் மற்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர், நேற்று மக்களவையில் தங்கள் கட்சி எம்.பியான ரமேஷ் பிதுரி செய்த வெறுப்புப் பேச்சைக் கண்டு வெட்கமின்றி மகிழ்ச்சியடைந்தனர். மோடி-ஷா ஆட்சியில் பாஜகவின் அவமானகரமான நிலை இது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-யின் அநாகரீக பேச்சு : கொந்தளிக்கும் தலைவர்கள்.. குவியும் கண்டனங்கள் !

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, மஹுவா மொய்த்ரா, "பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை 'முல்லா பயங்கரவாதி' என்றெல்லாம் அவதூறாக மக்களவையில் பேசியுள்ளனர். பாஜக ஆதரவு மீடியாவுடன் (Godi media) மரியாதைக்குரிய கீப்பர் ஓம் பிர்லா, விஸ்வகுரு நரேந்திரமோடி, பாஜக தலைவர் JP.நட்டா இது குறித்து ஏதாவது நடவ்டிக்கை எடுக்கப்படுமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சிபிஐ (எம்) எம்.பி., சு.வெங்கடேசன், "நேற்று சந்திரயான் 3 வெற்றியைப் பாராட்டும் விதமாக மக்களவையில் நடந்த விவாதத்தில் BJP எம்.பிக்கள் பேசிய காணொலிகளை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். அறிவியலுக்கு எதிரான பழமைவாத பித்துப்பிடித்த ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள் அவை.

இதன் உச்சமாக எதிர்க்கட்சி MP-களை தீவிரவாதிகள் என்றும் மாமாக்காரர்கள் என்றும் இன்னும் மோசமான பல வார்த்தைகளைக் கொண்டும் தாக்கினார்கள். அறிவியல் பார்வை, சந்திரயான் வெற்றி, இந்தியா கூட்டனி, அவையின் மாண்பு அனைத்தும் ஒரு சேர ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories