அரசியல்

#FACTCHECK | அம்புட்டும் பொய்.. NEET காலி பணியிடங்கள் குறித்து போலி கணக்கை உளறிய அண்ணாமலை - உண்மை என்ன?

கடந்த ஆண்டு இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்ததாக பொய்யை கட்டவிழ்த்துள்ளார் அண்ணாமலை.

#FACTCHECK | அம்புட்டும் பொய்..  NEET காலி பணியிடங்கள் குறித்து போலி கணக்கை உளறிய அண்ணாமலை - உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே பிரச்னைகள் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. பாலியல் புகார், கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிற கட்சிகளையும் கட்சியினரையும் அவமரியாதையாக பேசுவதோடு, சொந்த கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களையும் இழிவாக பேசி வருகிறார்.

அதோடு தனது வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், வரலாறு கூறுகிறேன், புராணம் கூறுகிறேன் என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறிவருகிறார் அண்ணாமலை. அந்த வகையில் அண்மையில் கூட பேரறிஞர் அண்ணா குறித்து தவறான தகவலை பேசியதோடு, அது பிரபல பத்திரிகையில் வந்ததாகவும் தெரிவித்தார்.

#FACTCHECK | அம்புட்டும் பொய்..  NEET காலி பணியிடங்கள் குறித்து போலி கணக்கை உளறிய அண்ணாமலை - உண்மை என்ன?

ஆனால் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை அவர் கூறிய தி இந்து நாளிதழ் மறுத்துள்ளது. மேலும் அண்ணாமலை கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றும் விளக்கம் தெரிவித்துள்ளது. இதனால் அண்ணாமலையின் சாயம் மீண்டும் வெளுத்து போயுள்ளது. அவர் கூறும் பொய்களை பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக கேள்வி கேட்டால், பதில் சொல்வதற்கு பதிலாக கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களை அவமரியாதை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார் அண்ணாமலை.

முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை, அவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசினார். தொடர்ந்து மீண்டும் தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசி சிக்கலில் சிக்கிக்கொண்ட அவர், அவர் கேட்ட கேள்விக்கு இறுதி வரை சரியான பதிலளிக்காமல் இருந்தார். அதோடு ரபேல் வாட்சுக்கான பில்லை தற்போது வரை கொடுக்கவில்லை.

அதைப்பற்றி கேட்டாலும் வரை பதில் வராமல், வேறு விஷயங்களை பேசி பேச்சையுமே திசை திருப்பி வருகிறார். தொடர்ந்து பத்திரிகையாளரை இழிவுபடுத்தி வரும் அண்ணாமலை மீண்டும் அசிங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

#FACTCHECK | அம்புட்டும் பொய்..  NEET காலி பணியிடங்கள் குறித்து போலி கணக்கை உளறிய அண்ணாமலை - உண்மை என்ன?

அதாவது இன்று செய்தியாளரை சந்தித்த அண்ணாமலையிடம், முதுகலை நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு பதிலளிக்காமல், பத்திரிகையாளர்களை இடது கையால் டீல் செய்து வருவதாகவும், உங்களுக்கு சொந்த அறிவு இல்லையா என்றும் இழிவான சொற்களால் கேட்டார்.

பத்திரிகையாளரிடம் அவர் அவ்வாறு கேட்டார் சரி.. ஆனால், அவரளித்த பதிலோ ஒன்றும் தெரியாதவர்கள் அடித்து விடுவது போல் இருந்தது. மேலும் தான் தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று எண்ணி அவர், அள்ளிவிட்ட விஷயங்கள் தற்போது மீண்டும் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

#FACTCHECK | அம்புட்டும் பொய்..  NEET காலி பணியிடங்கள் குறித்து போலி கணக்கை உளறிய அண்ணாமலை - உண்மை என்ன?

அதாவது பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டு இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்ததாக தெரிவித்தார். இது முற்றிலும் தவறான விஷயமாகும். உண்மை என்னவெனில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் MBBS இடங்கள் 1,07,948 ஆகவும், முதுநிலை இடங்கள் 67,802 ஆகவும் உள்ளது. இதனை ஒன்றிய அரசு அதிகாரபூர்வமாக கடந்த 11 ஆகஸ்ட் 2023-ல் தெரிவித்துள்ளது.

இதில் அண்ணாமலை கூறிய 1 லட்சத்து 80 ஆயிரம் என்ற கணக்கு இல்லவே இல்லை. அந்த 2-ஐயும் கூட்டினாலும் 1 லட்சத்து 80 ஆயிரம் கூட வராது. இதில் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்ததாக வழக்கம்போல் ஒரு பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளார். தான் கூறிய டேட்டாவே தவறு.. இதில் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல் வெளியில் காட்டிக்கொள்கிறார் அண்ணாமலை.

இந்த சம்பவத்துக்கு சிபிஐ (எம்) மாநில நிர்வாகி கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜகவின் லைவர் அண்ணாமலை ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, கேள்வி கேட்பதற்கு முன்பாக, ரிசர்ச் பண்ணிவிட்டு வர வேண்டும், பி.ஹெச்.டி. படிச்சிட்டு வர வேண்டும், சயின்டிஸ்ட்டாக இருக்க வேண்டுமென்கிற ரேஞ்சில் திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார். அந்த பதிலில் தான் ரிசர்ச் செய்து விட்டு வந்திருப்பதாக பேசியிருக்கிறார்.

ஆனால் பாஜகவில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் என்று அவர் ரிசர்ஜ் செய்து கண்டுபிடித்ததாகவும், அவருக்கு இதெல்லாம் தெரிருந்திருப்பதனால் தான் பத்திரிகையாளர்களை இடது கையால் டீல் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். உண்மையில் அண்ணாமலையின் பேச்சுக்கள் தான் இடது கையால் டீல் செய்ய தக்கவை." என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories