அரசியல்

’6 மணிக்கு மேல்’.. அண்ணாமலை vs அ.தி.மு.க: மீண்டும் கூட்டணிக்குள் முற்றும் மோதல்- முகம் சுளிக்கும் மக்கள்!

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

’6 மணிக்கு மேல்’.. அண்ணாமலை vs அ.தி.மு.க: மீண்டும் கூட்டணிக்குள் முற்றும் மோதல்- முகம் சுளிக்கும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி வைத்ததில் இருந்தே இரண்டு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலின்போது கூட பா.ஜ.க பெயரைப் பயன்படுத்தினால் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குக்கூட கிடைக்காது? என்பதைத் தெரிந்து கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடி பெயர் மற்றும் படங்களை தவிர்த்தே பிரச்சாரம் செய்தது.

மேலும் அண்ணாமலை போன்ற பா.ஜ.கவினர் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்றும் கூறிவருகின்றனர். இது அ.தி.மு.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அண்ணாமலையில் நடவடிக்கைக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிஞர் அண்ணா குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிய கருத்திற்கு தி.மு.க, அ.தி.மு.க மற்றும் சமூக அமைப்பினர் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

’6 மணிக்கு மேல்’.. அண்ணாமலை vs அ.தி.மு.க: மீண்டும் கூட்டணிக்குள் முற்றும் மோதல்- முகம் சுளிக்கும் மக்கள்!

அந்த வகையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம், அண்ணாவை பற்றிப் பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. கூட்டணியிலிருந்து கொண்டு இப்படித் தரம் தாழ்ந்து பேசுவதா?. திட்டமிட்டே அண்ணாவை இழிவுபடுத்துகிறார். நீங்கள் உங்களது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கு அண்ணாமலையும் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். அதில், "சி.வி.சண்முகத்திற்கு மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாரி பேசுவார். எனக்கும் கடும் சொற்களைப் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாகத் துப்பாக்கி பிடித்த கை இது. எனக்கு இவர் பாடம் எடுக்க வேண்டாம்" என கூறியுள்ளார். இதையடுத்து அ.தி.மு.கவினர் தொடர்ந்து அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனால் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவிற்கு இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பொது வெளியில் இப்படி இவர்கள் மாறி மாறி தங்களை அசிங்கப்படுத்தி வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories