அரசியல்

27,000 கோடிக்கு மாநாட்டு மையம்.. நாடாளுமன்ற கட்டிடத்தை விட 31 மடங்கு அதிக செலவு.. பாஜகவின் அடுத்த ஊழல் ?

நாடாளுமன்ற கட்டிடத்தை விட 31 மடங்கு அதிக செலவு செய்து 27,000 கோடிக்கு மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

27,000 கோடிக்கு மாநாட்டு மையம்.. நாடாளுமன்ற கட்டிடத்தை விட 31 மடங்கு அதிக செலவு.. பாஜகவின் அடுத்த ஊழல் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்காக பாரத் மண்டபம் என்ற அரங்கம் ரூ.2700 கோடிக்கு கட்டப்பட்டது. ஆனால், மாநாடு நடைபெற்றபோதே அங்கு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மழை பெய்ததால் நீர் தேங்கி உலக அளவில் இந்தியாவுக்கு கெட்டபெயர் ஏற்பட்டது.

இந்த நிலையில், ரூ. 27 ஆயிரம் கோடி செலவில், டெல்லி துவாரகாவில் மாநாட்டு மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த மையம் இன்று மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரால் திறக்கப்பட்டது. அதே நேரம், புதிய பாராளுமன்றம் கட்டடம், மற்றும் முழு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் செலவு ரூ. 20,000 கோடியாக இருந்த நிலையில் , மாநாட்டு மையம் ஏன் அதை விட அதிக செலவில் காட்டப்படுகிறது என்ற கேள்வி எழுந்தது.

27,000 கோடிக்கு மாநாட்டு மையம்.. நாடாளுமன்ற கட்டிடத்தை விட 31 மடங்கு அதிக செலவு.. பாஜகவின் அடுத்த ஊழல் ?

இதனிடையே மோடியும் பாஜகவும் சேர்ந்து இந்த மாநாட்டு மையத்துக்கான ரூ. 27 ஆயிரம் கோடியில் ,ஊழல் செய்து எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதை கண்டறிய உடனடியாக விசாரணை தேவை என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " தனது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரூ. 27 ஆயிரம் கோடி செலவில், டெல்லி துவாரகாவில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி. புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான செலவு ரூ. 862 கோடி. முழு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் செலவு ரூ. 20,000 கோடி. ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூ.990 கோடி.

ஆனால், புதிய பாராளுமன்ற கட்டிடம் , முழு சென்ட்ரல் விஸ்டாவை விட அதிக செலவு செய்து மாநாட்டு மையம் கட்டப்பட்ட காரணம் என்ன ? ஜி-20 மாநாட்டுக்காக ஏற்கனவே பாரத் மண்டபம் கட்டப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு மாநாட்டு மையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன ? 2024 தேர்தல் நிதிக்காக மோடியும் பாஜகவும் சேர்ந்து இந்த மாநாட்டு மையத்துக்கான ரூ. 27 ஆயிரம் கோடியில் ,ஊழல் செய்து எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதை கண்டறிய உடனடியாக விசாரணை தேவை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories